கோவையில் கிரஷர், குவாரிகள் நல சங்கம் சார்பில் 28 ஏக்கரில் மரக்கன்று நடவு…!

கிரசர் மற்றும் குவாரிகள் நல சங்கம் சார்பில் கோவையில் 28 ஏக்கரில் மரக்கன்று நடவு பணி துவக்கம்

கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை, கோயம்புத்தூர் மாவட்ட கிரசர் மற்றும் குவாரிகள் நல சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா இன்று நடந்தது. செட்டிபாளையம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்று நடும் பணி தொடங்கியது.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் ஜெயபால், கிரசர் , குவாரிகள் மற்றும் லாரி உரிமையாளர் கள் நல சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி, கோவை மாவட்ட கிரசர் மற்றும் குவாரிகள் சங்க நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் புங்கன் ,வாகை, வேம்பு, நொச்சி, அகில் உள்பட 30க்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 3,000 மரக்கன்றுகள் தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி நடவு செய்து வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இதேபோல் ஜூன் மாதம் 5000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கிரஷர் மற்றும் குவாரிகள் நல சங்கம் சார்பில் வறட்சி அதிகம் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து சொட்டு நீர் பாசனம் மூலமாக தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

செட்டிபாளையம்,ஓராட்டு குப்பை உள்பட பல்வேறு பகுதிகளில் மரக்கன்று நடவு மூலமாக பசுமை தோற்றம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *