Ginder app: அதுக்கு போன ஐ டி வாலிபருக்கு அடி உதை பணம் போச்சு…
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர் தனது செல்போனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் (கிண்டர் ஆப்) செயலியை பயன்படுத்தி வந்தார். அப்போது, வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர்.
இதனையடுத்து அந்த வாலிபர் ஐடி ஊழியரை பிகே புதூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வரவழைத்தார். அங்கே ஐடி நிறுவன ஊழியர் சென்ற போது மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் திடீரென ஐடி ஊழியரை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
மேலும், அவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,400 மற்றும் செல்போனை பறித்து கொண்டு அவரை துரத்தி விட்டனர். அதிர்ச்சியடைந்த ஐடி ஊழியர் இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ஐடி ஊழியரிடம் ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் பழகி பணம், செல்போன் பறித்தது தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த விஷ்ணு (19), கபில் மாதேஷ்வரன் (19), சக்திவேல், கதிரவன் உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதில் போலீசார் விஷ்ணு மற்றும் கபில் மாதேஷ்வரனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
