பத்திரம் பதிவு செய்யாமல் நீண்ட காலம் பெண்டிங் இருந்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை…

தமிழக பத்திரப்பதிவு துறை ஐஜி தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு டிஐஜி மற்றும் மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள அதிரடி சுற்றறிக்கை;

பதிவுத்துறை பணியாளர்கள் மீது பெறப்படும் புகார்/கையூட்டுப் புகார் மனுக்களை வகை (1), வகை (II), வகை (III) & வகை (TV) வகைப்படுத்தி, புகார் மனுவின் வகைக்கு ஏற்றாற்போல் புகார் மனுவின் மீது (நேரடியாக) இரகசிய விசாரணை மேற்கொள்ளப்படும்.

புகார் மனு குறித்து ஆதார ஆவணங்கள் மற்றும் வாக்குமூல நகல்களுடன் முழுவிபர விசாரணை பதிவுத்துறைத்தலைவருக்கு அறிக்கையினை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களால் பதிவுத்துறை பணியாளர்கள் மீது அதிகளவிலான புகார்கள் தெரிவிக்கப்படுவதால், புகார் தெரிவிக்கப்படும் பணியாளரின் பதிவுப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களுடன் விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு கோரப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் புகாருக்குட்பட்ட பணியாளரின் குறிப்பிட்ட பணியிடத்தில் செயல்பாடுகள் குறித்த விவரம் தேவை.

  1. பதிவுப்பணியில் அரசுக்கு ஈட்டிய வருவாய் விவரம் (Revenue Achievement)
  2. சென்ற ஆண்டு வருவாய் உடன் ஒப்பிட்டு விவரம் தர வேண்டும்
  3. பதிவு செய்துள்ள ஆவணங்களின் எண்ணிக்கை (Total number of

பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்)

நிலுவை வைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை (Total number of Documents kept pending)

நிலுவையில் இருந்து disposals) விடுவிக்கப்பட்ட ஆவணங்களின் (Total number of pending document & Percentage of ) ஆவணம் பதிவான நாளில் திரும்ப வழங்கப்பட்ட ஆவணங்களின் விவரம்

  1. இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47A(1)-ன் கீழ் அனுப்பப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை /சதவீதம்.
  2. தணிக்கை இழப்புகள் வசூல் செய்யப்பட்ட விவரம் (Audit Loss Collection details)
  3. தணிக்கை குறிப்புரை இழப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை

9. பொதுமக்களுக்கு வில்லங்கச்சான்றுகளின் வழங்கப்பட்ட எண்ணிக்கை விவரம். காலதாமதம் (Encumbrance Certificate issued details)

  1. களப்பணி மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை விவரம் மற்றும் உரிய காலத்திற்குள் களப்பணி மேற்கொள்ளப்பட்டு ஆவணதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விவரம் (Building Inspection & Return of documents details)

11.தனியார் தொடர்பான உள்தணிக்கை இழப்புகள், மாநில கணக்காயர் தணிக்கை இழப்புகள் விவரம் (Individual Audit Loss details)

12.தனியர் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள்

(ஒழுங்கு நடவடிக்கைக் குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் நிலுவையில் உள்ளன)

13.தனியர் மீதான போலி ஆவணப்பதிவு தொடர்பான புகார் மனுக்களின் விவரங்கள்.

  1. தனியர் பணிகாலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு (DVAC) மேற்கொள்ளப்பட்ட திடீராய்வுகளின் துறையினால் விவரங்கள்.

புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை அலுவலர்களான சம்மந்தப்பட்ட துணைப்பதிவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்டப்பதிவாளர்கள் புகார்கள் குறித்து உரிய விசாரணை செய்து, புகாருக்குட்பட்ட பணியாளர் தொடர்பான மேற்கண்ட அனைத்து விவரங்களுடன் முழுவிபர விசாரணை அறிக்கையினை ஆதார ஆவணங்களுடன் பதிவுத்துறைத்தலைவருக்கு சமர்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *