கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர் போலீஸ்காரர் கைது…!
கோவை பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று பஸ் சென்றது.
அப்போது அந்த பஸ்சில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பஸ் படியில் நின்றபடி பயணித்து உள்ளார்.
அப்போது, அதே பஸ்சில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்தார் அவர்.
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவி கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லாரி நிறுத்தத்தில் இறங்கி இச்சம்பவம் குறித்துப் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாலியல் தொல்லை தந்தது போத்தனூர் குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின்
ஓட்டுநராகப் பணியாற்றி வந்த போலீஸ்காரர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர். பாதுகாப்பளிக்க வேண்டிய போலீஸ்காரர்
மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
