கோவை கல்லூரி ஹாஸ்டல் கேண்டீனில் புழு, பூச்சி உணவு…!

கோவை மாவட்டத்தில் ஏராளமான கல்லூரியில் உள்ளது. கோவையில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இந்த கல்லூரியில் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கல்லூரி வளாகத்தில் ஹாஸ்டல் அமைத்து அங்கேயே கேண்டீன் அமைத்து சமையல் செய்து தருகிறார்கள்.

மாணவ மாணவிகள் ஹாஸ்டல் கேண்டின் சாப்பாடு தான் சாப்பிட வேண்டும். பல்லாயிரம் மாணவ மாணவிகள் கல்லூரி கேண்டின் சாப்பாடு சாப்பிடுகின்றனர். இங்கே தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் கேவலமாக இருப்பதாக மாணவி மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் உள்ள ஒரு விடுதி உணவகத்தில் உணவில் புழு பூச்சிகள் இருப்பது தெரியவந்தது.

இதை எதிர்த்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் அடக்கப்பட்டது. இதேபோல் சமீபத்தில் மதுக்கரை வட்டாரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி கேன்டீன் உணவில் புழு பூச்சி இருப்பது கண்டறியப்பட்டது.

மாணவ மாணவிகள் கொந்தளித்து அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்போனில் டார்ச் அடித்து போராட்ட பதிவுகளை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டனர் .இது வைரலானது.

இது தொடர்பாக மாணவ மாணவியுடன் விசாரித்த போது, ” விடுதி உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமாக இல்லை. போர்வெல் தண்ணீர் பயன்படுத்தி கழுவாத டேங்க் மூலமாக தண்ணீர் பிடித்து பயன்படுத்துகிறார்கள். இந்த தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வதில்லை. காய்கறி மற்றும் பருப்பு போன்றவை சுத்தமாக இருப்பதில்லை.

அசத்தமான தண்ணீர் உணவுகளினால் எங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. சமையல் செய்த உணவில் புழு பூச்சி கரப்பான் பூச்சி ஈ போன்றவை அதிக அளவு காணப்படுகிறது. இது தொடர்பாக புகார் தெரிவித்தால் யார் புகார் சொல்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலைமை இருக்கிறது.

வெளியூரிலிருந்து வந்து விட்டோம் விடுதியில் தங்கி விட்டோம். எனவே அவர்கள் போடும் சாப்பாடு தான் சாப்பிட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை எங்களுக்கு இருக்கிறது. கல்லூரி நிர்வாகங்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றன. உணவு பாதுகாப்புத் துறையினர் இங்கே ஆய்வு செய்ய வேண்டும். சின்ன தள்ளுவண்டி கடை நடத்தினால் கூட அங்கே ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் செல்கிறார்கள். ஆனால் கல்லூரி விடுதிகளில் நடக்கும் இது போன்ற செயல்களைத் தடுக்க உணவு பாதுகாப்பு துறையினர் ஆர்வம் காட்டவில்லை.

பல ஆயிரம் மாணவ மாணவிகள் கல்லூரி கேண்டீன் உணவுகளை சாப்பிட்டு அதிகளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எந்த சத்துமில்லாத இந்த உணவுகளால் தொடர்ந்து நோய் உருவாகும் நிலைமை இருக்கிறது. எங்களை காப்பாற்ற அரசுதான் முயற்சிக்க வேண்டும்” என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *