தேசிய கூடை பந்து போட்டி: தென்மேற்கு ரயில்வே அணி சாம்பியன்…

கோவை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60ம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து, முதலாம் ஆண்டு மகளிருக்கான கூடைப்பந்து போட்டிகள் 5 நாட்கள் நடந்தது.

ஆண்கள் பிரிவில் 4 அணிகளும் பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடந்தது. செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே, வஹப்ளி தென்மேற்கு ரயில்வே அணிகள் மோதின. இதில் தென்மேற்கு ரயில்வே அணி 65 54 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றாவது இடத்தை சாலக்குடி சேக்ரெட் இருதய மருத்துவமனை அணியும், நான்காவது இடத்தை கோவை மாவட்ட கூடைப்பந்து அணியும் பிடித்தது.

ஆண்கள் இறுதிப் போட்டியில் சென்னை ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு, புது டில்லி ஓஎன்ஜிசி அணி மோதியது. இதில் ஒஎன்ஜிசி அணி 71-66 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. மூன்றாவது இடத்தை இந்தியன் வங்கி அணியும், நான்காவது இடத்தை கேரளா மாநில மின்சார வாரிய அணியும் பிடித்தது.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற ஓஎன்ஜிசி அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் கோப்பையும், ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணிக்கு ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.40 ஆயிரம். மற்றும் நான்காம் இடம் பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணியின் ரிஷிகேஷ் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற தென் மேற்கு ரயில்வே அணிக்கு ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பெற்ற தென் மத்திய ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாவது, நான்காம் இடம் பெற்ற அணிக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. தென் மத்திய ரயில்வே அணியை சேர்ந்த வீஹா ரெட்டி என்ற வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில், பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சி.ஆர்ஐ பம்ப் நிறுவனர் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் செல்வராஜ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி மற்றும் செயலாளர் பழனிசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *