கோவையில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே நிறைவு… விரைவில் சங்கிலி, டேப் சர்வே
கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது.
கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய கடந்த காலங்களில் 20 கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் 141 கல் குவாரிகளில் கடந்த மாதமாக டிரோன் சர்வே நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்தது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு, இதில் முறையாக அரசுக்கு செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டது .
முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கள் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும். தினமும் எத்தனை கனமீட்டர் அளவிற்கு கனிம பொருட்கள் சேகரிக்கப்படுகிறது.
கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறதா, கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்யப்படும் கனிமங்கள் அளவு குறித்த விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டிரோன் சர்வே விவரங்கள் சென்னையில் உள்ள கனிம வளத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில குவாரிகளில் டிரோன் சர்வே தொடர்பான விவரங்களில் சற்று குழப்பம் இருப்பதாக தெரிகிறது. கனிமங்களின் அளவு, ஆழத்தை துல்லியமாக டிரோன் கண்டறியவில்லை.
இதை நேரடியாக அளவீடு செய்ய வேண்டும். மேலும் கள ஆய்வு சங்கிலி, டேப் மூலமாக அளந்து எடுக்கப்பட்ட கனிமங்கள் அளவை கண்டறிய வேண்டும். அப்போது தான் முறையாக விதிமுறை மீறலுக்கு அபராதம் விதிக்க முடியும் என்ற நிலைமை இருக்கிறது. எனவே டிரோன் சர்வே லவத்து அபராதம் விதிப்பது, நடவடிக்கை எடுப்பது சாத்திய குறைவாக இருப்பதாக தெரிகிறது,
கல் குவாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் நேரடியான ஆய்வு தான் பிரச்னைக்கு தீர்வு என பழைய நடைமுறைக்கு கனிம வளத்துறை அதிகாரிகள் மாறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

I hit a nice jackpot here last week! The slot games are fair and the excitement is real. You should join hulk123slot right away.