கோவையில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது… போலீசில் தப்ப முயன்ற குற்றவாளிக்கு எலும்பு முறிவு

கோவை கிணத்துக்கடவு பகுதியில் சிக்கலாம் பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ‌ அஸ்வின் ( 22 ) என்பவர் தலையில் சுத்தியால் தாக்கியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ்( 21) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் நள்ளிரவில் அஸ்வினை கொலை செய்து அதை போட்டோ மட்டும் வீடியோ எடுத்துள்ளனர் . இந்த வீடியோ பதிவுகளை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வைரலாக்கினர். கொலை செய்த பின்னர் அஸ்வினின் நண்பர்களுக்கு பாத்தியாடா நாங்க கொலை பண்ணிட்டோம் என கூறி வீடியோ பதிவு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலை மறைவாக இருந்த மாதேஷ் மற்றும் 17 வயது சிறுவனை இன்று கைது செய்தனர்.

போலீசார் மாதேசை கைது செய்ய முயன்ற போது அவர் தப்ப முயற்சித்துள்ளதாக தெரிகிறது. அந்த நேரத்தில் அவர் கீழே விழுந்து விட்டதாகவும் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட பின்னர் கோவையில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்

கைதான மாதேஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்,” அஸ்வின் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் மது வாங்க கடைக்கு சென்றபோது அவர் செல்போனில் எங்களிடம் தொடர்பு கொண்டு பேசினார் . ஏற்கனவே அவர் போதையில் இருந்தார் . தனக்கு மேலும் மது பாட்டில் வாங்கி தர வேண்டும் என டார்ச்சர் செய்தார் . இதனால் நான் கோபத்தில் இருந்தேன் . எனது நண்பர் வீட்டுக்கு நான் சென்றபோது அங்கே அஸ்வின் இருந்தார். அவர் என்னிடம் வாக்குவாதம் செய்து தாக்கினார். இதனால் கோபத்தில் இருந்த நான் அவரை பழிவாங்க நினைத்தேன். என் நண்பர் வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கே இருந்த சுத்தியல் மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்தேன். அவர் ரத்தம் வெளியேற கோரமாக இறந்து விட்டார். அவர் இறந்த பின்பும் நான் சுத்தியிலால் தொடர்ந்து தாக்கினேன். இதை எனது தம்பி செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதை நான் பலருக்கும் அனுப்பி விட்டேன். இந்த வீடியோ பதிவு வைரலாக மாறிவிட்டது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *