கோவையில் சிறுவனை அடித்து கொலை செய்து புதைத்த கொடூரம்…

கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா . கூலி தொழிலாளி.

இவரது மகன் தவிஸ் (13 ). இவர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்தார் . கடந்த 15ம் தேதி இவர் மீன்பிடிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார் .திரும்ப அவர் வீட்டுக்கு வரவில்லை.

இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுவன் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்தது. சிறுவன் அதே பகுதியில் மாசாணியம்மன் கோயில் வீதி கால்வாயில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது அவர்கள் பாட்டிலால் சிறுவனின் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர். சடலத்தை மறைப்பதற்காக அதே பகுதியில் குழி தோண்டி சிறுவனை புதைத்து விட்டதாக தெரிகிறது . இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது கொலை செய்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனனர். மேலும் அவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வருவாய்த்துறையினர் மூலமாக சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை கொலை செய்து புதைத்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலையில் இரண்டு சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்

சிறுவர்களிடம் போலீசார் விசாரித்த போது எங்களை எதிர்த்து பேசியதால் கொலை செய்து விட்டோம். சடலம் கிடந்தால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என நினைத்து மண்ணில் புதைத்து விட்டோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *