கோவையில் நண்பரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு…

கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளியான இவரது மகன் அஸ்வின் (22) .

இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த,செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ்(16), மாதேஷ்(22),ஆகியோருடன் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று மது குடித்தனர்.

அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, நள்ளிரவில் தூங்காமல் கொலை செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து. அதிகாலை 01.45 மணிக்கு அஸ்வின் தூங்கி கொண்டிருந்தபோது சுத்தியால் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்து அறுத்தும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபிரேதத்தை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தனிப்படை அமைத்து தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை,சுத்தியால் அடித்து,கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம், கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குற்றவாளிகள் கொலை செய்து அதை வீடியோ போட்டோ பதிவு செய்தனர்.

அதை தங்களது நண்பர்களுக்கு அனைத்தையும் சோசியல் மீடியாக்களில் வெளியீட்டும் அதிர வைத்தனர். கொலை செய்யும்போது மண்டையிலே சுத்தியல் போடு, டேய் எல்லாரும் பாருங்கடா கொலை பண்ணியாச்சு டா என பேசும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த கொலை தொடர்பான வீடியோ பதிவுகள் ரத்தம் உறைந்த கத்தி சுத்தியல் அரிவாள் போன்றவையும் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

2 thoughts on “கோவையில் நண்பரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *