கோவையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு…!

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தொழில் பூங்கா வளாகம் உள்ளது. அங்கு ஐ.டி., சாப்ட்வேர் என 6 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் மும்பையை தலைமையிடமாக கொண்ட சாப்ட்வேர் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வந்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில், இன்று காலை 9 மணிக்கு, 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் திடீரென புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அங்கு இருந்த முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், கணினிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சோதனை முடிவிலேயே கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும். சோதனையையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

One thought on “கோவையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *