Karamadai panchayat: பாலம், கால்வாய் கட்டுமான பணிகள் கலெக்டர் ஆய்வு
கோவை காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கரம்பாளையம், பெள்ளாதி மற்றும் மூடுதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இதில் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, சுபா. உதவிப் பொறியாளர்கள் அசோக்குமார், ரகுநாதன் ராஜேஸ்வரி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்லருமை ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு நிதி ரூ.4.45 கோடி மதிப்பீட்டில் கலட்டியூர் முதல் ஒன்னிபாளையம் வரையிலான பாலப்பணி நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது,
பெரிய படியனூர் குமரன் அலிஸ் முதல் சென்னிவீரம்பாளையம் மயானம் வரை விபிஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் 1.64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்வாயை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணியையும், மூடுதுறை ஊராட்சிக்குட்பட்ட அம்மாபாளையத்தில் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 26 குடியிருப்புகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். வளர்ச்சித்திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பணிகள் தரமாக இருக்கிறதா என விசாரணை செய்தார்.
