பஸ்ஸில் டிக்கெட் வாங்கலையா … கண்டறிய போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு…

கோவை மண்டலத்தில் அரசு பஸ்கள் இயக்கம், பயணச்சீட்டு வழங்குவது உள்ளிட்டவற்றை முறையாக கண்காணிக்க வேண்டும் என கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் மண்டல அளவிலான பயணச்சீட்டு பரிசோதகர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்கள், போக்குவரத்து ஆய்வாளர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மேலாண் இயக்குனர் முகமது நாசர் தலைமை வகித்தார். இதில், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து பயணச்சீட்டு பரிசோதகர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளுக்கான சேவையை வழங்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பணியை கண்காணிக்கும் அலுவலர்களான பயணச்சீட்டு பரிசோதர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்றுநர்கள் ஆகிய அனைவரும் உரிய முழு சீருடையுடன் பணியில் ஈடுபடவேண்டும்.

உரிய நேரத்தில் பேருந்துகள் இயங்குவது அனைத்து நிறுத்தங்களிலும் கவனமுடன் பயணிகளை ஏற்றி இறக்குவது, பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்வது, போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்குவது முறையாக பயணச்சீட்டு வழங்குவது, அனுமதி உள்ள உணவகங்களில் நிறுத்துதல் மற்றும் பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதுணையாக இருப்பது போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.

இதில், குறைபாடு கண்டறியப்பட்டால் அதனை சரி செய்ய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கண்காணிப்பு பணி முழுமையாக செய்தால் பேருந்து இயக்கம் நல்ல நிலையில் இருக்கும் என மேலாண் இயக்குனர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பு, கணிவான சேவை மற்றும் பயணிகளிடையே அரசு போக்குவரத்து கழகத்தின் நற்பெயரை நிலை நிறுத்துவது ஒவ்வொரு அலுவலரின் முதன்மை பொறுப்பு எனவும் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் தரமான சேவையில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளார்.

One thought on “பஸ்ஸில் டிக்கெட் வாங்கலையா … கண்டறிய போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *