திருடர்கள் என வடமாநிலத்தினர் மீது தாக்குதல்…
:கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் ராவத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(46).
இவரது வீட்டில் வாடகைக்கு வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் இருகூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இதில், சந்திரதாஸ் (26) மற்றும் அவரது நண்பர் ஆகியோர் நேற்று அவர்கள் வேலை பார்த்த நிறுவனம் அருகில் கிடந்த வயர்களை தீ வைத்து எரித்து செம்பு கம்பிகளை எடுக்க முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு வந்த சிலர், சந்திரதாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை திருடர்கள் என நினைத்து தாக்கி உள்ளனர்.
கும்பல் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் நாங்கள் திருடர்கள் இல்லை என்றும், வேலை பார்ப்பவர்கள் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரதாஸ் வீட்டு உரிமையாளர் ரமேஷுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து,
வட மாநில வாலிபர்களை தாக்கிய கும்பல் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

I’ve been trying out a few platforms lately and this one really stands out. The interface is smooth and everything just works. Definitely worth checking out zh88com