கோவை புதிய பூ மார்க்கெட் வீணானது…
கோவை பூ மார்க்கெட் பகுதியில் கடைகள் மிகவும் நெருக்கடியாக மக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக மலர் சந்தை அமைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் பழைய பூ மார்க்கெட் எதிரே 122 தரை கடைகள், 28 நிரந்தர கடைகள் உருவாக்கப்பட்டன. 1.20 கோடி ரூபாய் செலவில் மாநகராட்சியில் அமைக்கப்பட்ட இந்த பூ மார்க்கெட் கடந்த 2023ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த புதிய பூ மார்க்கெட் செயல்படவில்லை.
ரங்கையா வீதியில் இருந்த பழைய பூ மார்க்கெட் கடைகள் சீரமைக்கப்பட்ட பின்னர், இங்கே இருந்த கடை வியாபாரிகள் பழைய கடைகள் இருந்த பகுதிக்கு மாறி விட்டனர். சில கடைகள் மட்டுமே புதிய மார்க்கெட் இயங்கியது. பின்னர், அந்த கடைகளும் இடம் மாறி விட்டது. இப்போது எந்த கடைகளும் இல்லாமல் பூ மார்க்கெட் மூடப்பட்டது.
இந்த நிலையில் புதிய பூ மார்க்கெட் எந்த பயன்பாடும் இல்லாமல் அப்படியே விடப்பட்டது. அதில் பராமரிப்பு பணிகள் நடத்தாமல் கூரைகள் மற்றும் காம்பவுண்ட் இரும்பு தளவாடங்கள் அனைத்தும் துருப்பிடித்து வீணாகிவிட்டது. சிலர் இரவு நேரங்களில் காம்பவுண்ட் தாண்டி சென்று மது குடித்து ஜாலியாக இருக்கிறார்கள் சமூக விரோத செயல்கள் இங்கே அதிகமாகி விட்டது.
தற்போது பழைய பூ மார்க்கெட் பகுதியில் இட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. சில வியாபார கடைகள் தங்களது கடைகளை ரோடு மற்றும் நடைபாதை வரை நீட்டித்து விட்டனர். இங்கே நடப்பதற்கு கூட இடமில்லாத அளவுக்கு நெரிசல் காணப்படுகிறது.
மேலும் கடைகளுக்கு செல்லும் பாதைகளிலும் சிலர் ஆக்கிரமித்து கடைகளை அமைத்து நடப்பதற்கு இடமில்லாத சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள், மாநகராட்சி நிர்வாகம் எப்போதாவது இந்த கடைகளை அகற்றினாலும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பூ மார்க்கெட்டுகள் வந்து பூ வாங்கி செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பல்வேறு தரப்பினர் இது தொடர்பாக அரசு துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.
புதிதாக கட்டிய பூ மார்க்கெட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதில் பூக்கடைகள் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். நடைபாதை மற்றும் ரோட்டோரங்களில் வியாபார கடைகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Врач учитывает симптомы, риски, анамнез и семейную ситуацию, чтобы предложить подходящую программу.
Подробнее – вызов нарколога на дом в Луганске