சிறுவாணி குடிநீர் 4 கோடி லிட்டராக விரைவில் குறைப்பு…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 49.53 அடி. இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 29 அடியாக இருந்தது. மழைக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது. தென் மேற்கு பருவ மழை ஏறக்குறைய முடியும் நிலையில் இருக்கிறது.
வடகிழக்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்தது அரிது தான். எனவே நடப்பாண்டிற்கு மட்டுமல்ல வரும் கோடை காலத்திற்கும் நீர் தட்டுப்பாட்டை அதிகமாக்கும் அபாயம் இருக்கிறது. தற்போது தினமும் 5.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. மழை இல்லாததால், அணையின் நீர் மட்டம் தினமும் 5 முதல் 6 செ.மீ குறைந்து வருகிறது.
எனவே குடிநீர் சப்ளையை தினமும் 4 கோடி லிட்டர் என குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடை காலம் வரை இப்போதுள்ள குடிநீரை வழங்க முடியாது. இப்போதுள்ள குடிநீரை தினமும் 10 கோடி என நிர்ணயிக்கப்பட்ட அளவில் எடுத்தால் நவம்பர் மாதம் வரை மட்டுமே வழங்க முடியும். எனவே குடிநீர் வாரியத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். சிறுவாணி குடிநீர் வினியோக பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் தவிப்படைந்துள்ளனர்.

The game selection here is just insane! I spent the whole night exploring the slots and the graphics are top notch. Highly recommend dewaslot888
Super secure and trustworthy site. I felt comfortable depositing my funds knowing the platform is safe. Love the vibe at aman788slot.