வீட்டில் புகுந்த திருடனை பிடிக்க போராடிய பெண்…
கோவை ரத்தினபுரி அருகே உள்ள தயிர்இட்டேரி ரோடு பகுதியில் வசிப்பவர் சிவராஜ்.
இவரது மனைவி தீபா (30). இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு சில மணி நேரம் கழித்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்துகிடந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கு, பீரோவை ஒரு நபர் திறக்க முயற்சி செய்தது தெரியவந்தது. உடனே தீபா, அந்த நபரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர், அவரை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தீபா, ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். பின்னர், தீபா கூறிய அங்க அடையாளங்களை வைத்து, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பரை கைதுசெய்தனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபாவின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

I’ve tried a few apps lately but this one is definitely the smoothest. The interface is so clean and it’s super easy to navigate. Highly recommend 365phapp for anyone looking for a reliable platform!
Love the variety of games available here. It feels like a real casino right from my phone. Give bar222bet a try!