வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்பிற்கு நேரடி மாணவர் சேர்க்கை…

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்பு கல்லூரிகளில் மட்டும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான நேரடி மாணவர் சேர்க்கை வரும் 24-ம் தேதி நடக்கிறது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை பல்வேறு கட்ட கலந்தாய்வின்படி நடந்தது. இதையடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த வாரம் துவங்கியது.

இந்நிலையில் வேளாண் பல்கலை.யின் தனியார் இணைப்பு கல்லூரிகளில் காவியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி மாணவர் சேர்க்கையானது வரும் 24ம் தேதி காலை 9 மணியளவில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் நடக்கிறது. இந்த மாணவர் சேர்க்கையானது பல்கலை.யின் தனியார் இணைப்பு கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் அரசு உறுப்புக் கல்லூரிகளுக்கு பொருந்தாது.

இந்த நேரடி மாணவர் சேர்க்கைக்கு ஏற்கனவே வேளாண் பல்கலை.க்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம் பெற்று பொது கலந்தாய்வினை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள். தரவரிசை பட்டியலில் இடம் பெற்று பொது கலந்தாய்வில் ஏற்கனவே பங்கேற்காதவர்கள்,

துணைக்கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத ககுதியான விண்ணப்பதாரர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே சேர்க்கைப் பெற்று பயின்று வரும் மாணவர்கள் அவர்களின் மதிப்பெண் அடிப்படையிலும், சுய விருப்பத்தின் பேரிலும் கலந்து கொள்ளலாம்

மேலும், கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வு கட்டணமாக எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் ரூ.1500, இதர பிரிவினர் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். தனியார் இணைப்புக் கல்லூரிகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை (உணவு மற்றும் தங்குமிடக் கட்டணம் நீங்கலாக) இருக்கும்.

இதர கட்டணங்கள் குறித்த விவரங்களை அந்தந்த கல்லூரிகளை தொடர்பு கொண்டு கேட்டறிந்து தெளிவு பெறவும். தனியார் இணைப்புக் கல்லூரிகளின் தொலைபேசி எண்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி மாணவர் சேர்க்கைக்கான வகுப்புவாரியான காலியிடங்களின் விவரங்கள் நாளை (23-ம் தேதி) http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

நேரடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் 94886 35077, 94864 250/6 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

One thought on “வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்பிற்கு நேரடி மாணவர் சேர்க்கை…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *