கோவையில் வாகனங்களின் ஏர் ஹாரன், கண் கூசும் கூடுதல் லைட் அதிகரிப்பு
கோவையில் டிராபிக் விதிகளை பறக்க விடும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்துவது. அதிகமாகி விட்டது. இது, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், சாலைவிபத்துகளுக்கு வழி வகுக்கும் வகையிலும் உள்ளது. பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் ஆகிய பகுதிகளில் வாகனங்களை இயக்கும்போது, அந்த பகுதியில் ஒலி எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், விதி மீறி நகரில் எந்நேரமும் அதிகப்படியான ஒலி மாசு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மாநகரில் ஏர்ஹாரன் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகமாகி விட்டது. சிலர், கூடுதல் ஹாரன் அமைத்து, மிரட்டும் வகையில் வாகனம் ஒட்டுவதும் தொடர்கிறது.
இதேபோல், பயணிகள் வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்களில் கூடுதல் பல்புகள் அமைத்து இரவு நேரங்களில் இயக்குகின்றனர் இந்த முகப்பு விளக்குகள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கண்களை கூச செய்யும் வகையிலும் உள்ளன. ஆம்னி பஸ், புறநகர் பஸ் என பல சொருசு பஸ்களில் கூடுதல் விளக்குகள் அலங்காரமாக அமைத்துள்ளனர்.
இதுவும், எதிரே வரும் வாகனம் ஓட்டுனர்களின் கண்களை கூச செய்து,விபத்தில் சிக்க வழிவகுத்து விடுகிறது. நகரின் பிரதான ரோடு மற்றும் பைபாஸ் ரோட்டில் இந்த வாகனங்கள் அதிகமாக இயங்கி வருகிறது. இவ்வாறு ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்களையும், கண்களை கூச செய்து விபத்துக்கு வழி வகுக்கும் வாகனங்களையும் கண்டறிந்து, போலீசார், போக்குவரத்து துறையினர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் குழுவாக இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Really impressed with the variety of slots here. I managed to hit a nice win yesterday and the withdrawal was seamless. Love br55wwbet.
Found this place through a friend and it’s actually legit. The bonuses are generous and the customer support team is super helpful. bdy444 is my new go-to platform.