கோவையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம்…
தமிழக முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் துவங்கி வைத்தார்.
இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பக்குமார் இன்று துவக்கிவைத்து, குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்கினார்.
இவ்விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட சகாதார துறை நல அலுவலர் டாக்டர் பாலுசாமி, கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, குலூர் தொகுதி எம்எல்ஏ சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டத்தின்கீழ், கோவை அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22-ம்தேதி முதல் பிறந்த மொத்தம் 2,647 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. முதல் நாளான நேற்று கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை அரச மருத்துவமனைகளில் 25 குழந்தைகள் வீதம் மொத்தம் 100 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, தினமும் 100 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட இருக்கிறது. பின்னர், அமைச்சர் சம்பத்குமாருடன் அங்கிருந்த தவெசு நிர்வாகிகள் பலர் புகைப்படங்கள், ரீல்ஸ்-க்கு பயன்படுத்தும் வகையில் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, அங்கிருந்து அமைச்சர் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் சுமார் 10 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்காத நிலையில் அந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் பணியில் மருத்துவமனை டீன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அடுகாரிகளின் கைகளில் தங்க மோதிரங்கள் இருந்த நிலையில் அவர்கள் பதற்றம் அடைந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் தங்களின் மொபைல் போன் டார்ச் லைட் அடித்தனர். அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கினர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான மின்தடை இருந்து வரும் நிலையில், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை ஏற்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கோவை அரசு மருத்துவமனை நிகழ்ச்சி அரங்கில் காலை 8.30 மணிக்கே மோதிரம் பெற உள்ள தாய் மற்றும் சேய் கட்டாயமாக அமர வைக்கப்பட்டனர். இடையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மதியம் 12 mணிக்குத்தான் நிகழ்ச்சி துவங்கியது. பிற்பகல் 2 மணிக்கு நிறைவுபெற்றது. அதுவரை குழந்தைகள் பசியால் துடித்தன. தாய்மார்களும் பசியால் தவித்தனர். அவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை.
