கோவையில் 370 குட்டைகளில் கடும் வறட்சி…

கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 709 சிறு குளங்கள், சுசிவு நீர் குட்டை தடுப்பணைகள் இருக்கிறது.

எப்போது பருவ மழை உச்சமாக பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் 10 ஆண்டிற்கு பின் கடும் வறட்சி காணப்படுகிறது. கோடையை போல் வெயில் வாட்டி வதைக்கிறது. நீர் தேக்கங்களில் நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் போய் விட்டது. குறிப்பாக ஊரக பகுதிகளில் குட்டைகள் வறண்டு போய் விட்டது.

மாவட்ட அளவில் சுமார் 370 நீர் குட்டைகளில் நீர் இல்லாமல் வறட்சியில் இருப்பதாக தெரிகிறது. தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் வட்டாரங்களில் கணிசமான அளவு குட்டைகளில் நீர் தேக்கம் இருக்கும் அந்த பகுதியில் கூட இப்போது வறட்சியின் தாக்கம் அதிகமாகி விட்டது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது.

வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள், நீர் குட்டைகளும் காய்ந்து போய் விட்டது. வன விலங்குகளின் நீர் தேவைக்காக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட குட்டைகளில் நீர் பற்றாக்குறை இருக்கிறது. வன விலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களை சுற்றி வலம் வருகின்றன.

கோவை மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் நீர் ஆதாரத்தில் உள்ள உக்குளம், புதுக்குளம், கொலராம்பதி, நரசாம்பதி உட்பட 24 குளங்களிலும் வறட்சி காணப்படுகிறது. 8 குளங்களில் கழிவு நீர் கணிசமாக நிரம்பியிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 500 முதல் 600 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும். ஆனால் தற்போது தென் மேற்கு பருவ மழை சீசனில் 30 சதவீதம் அளவிற்கு கூட மழை பெய்யவில்லை. அதுவும் பரவலாக மழை பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வழக்கமாக அதிக அளவு மழை பெய்யும் ஆனால் இந்த முறை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள

சிறுவாணி, பவானி, பில்லூர், பிஏபி, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் கூ போதுமான அளவு மழை பெய்யவில்லை. அந்தப் பகுதியில் இருந்து நீர் பற்றாக்குறை அதிகமாகி விட்டத. அணைகளில் நீர்த்தேக்கம் குறைந்து காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் குடிநீர் பற்றாக்குறை கூட ஏற்படும் அளவிற்கு வறட்சியான நிலைமை காணப்படுகிறது.

உள்ளூர் நீர் ஆதாரங்கள் மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது.வழக்கமாக குளம் குட்டைகளில் நீர்த்தேக்கம் அதிகமாக காணப்பட்டால் போர்வெல் மூலமாக தண்ணீர் அதிகமாக கிடைக்கும்

வாய்ப்புள்ளது. ஆனால் இந்த முறை போர்வெல்களில் போதுமான தண்ணீர் இல்லாமல் வீணாக கிடக்கிறது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் “இந்த முறை விவசாயம் செய்வதற்கு போதுமான மழை பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் எங்களால் குறுகிய கால பயிர் சாகுபடி கூட செய்ய முடியவில்லை. கிராமத்தில் இருக்கும் குட்டைகள் அனைத்தும் வறண்டு போய்விட்டன. பல இடங்களில் கிணறுகளில் நீர் குறைந்துவிட்டது.

சில கிணறுகள் முற்றிலுமாக வறண்டு போய்விட்டன. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாத நிலைமையில் இருக்கிறோம். பயிர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிக அளவு பயிர் உற்பத்தி நடந்தது. தற்போது இதில் 30 முதல் 40 சதவீதம் அளவிற்கு கூட பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. வடகிழக்கு பருவமழை எப்போதும் கோவை மாவட்டத்தில் குறைவாகவே பெய்யும். எனவே அடுத்த வரும் சீசனை நம்பி எங்களால் பயிர் சாகுபடி செய்ய முடியாது. நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. விளைநிலையங்களை சும்மா போட்டு வேடிக்கை பார்க்கும் அளவிற்கு கஷ்டமான சூழல் உருவாகிவிட்டது. ” என்றனர்.

3 thoughts on “கோவையில் 370 குட்டைகளில் கடும் வறட்சி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *