கோவையில் முதியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
: கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (83). இவர் மனைவி இறந்து விட்டார். வீட்டில் இவர் தனியாக வசித்து வந்தார். இவரது வாரிசுகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
கிருஷ்ணசாமி வீட்டில் யாருமில்லை, கொள்ளயடிக்கலாம் என சிங்காநல்லூர் வசித்து வந்த காரைக்குடியை சேர்ந்த விக்ரம் (21) நெல்லை ராதாபுரம் பகுதியை சேர்ந்த ஜெபமணி ஆன்ட்ரூஸ் (24) ஆகியோர் திட்டமிட்டனர். இந்த கொள்ளைக்கு 17 வயதான மைனர் சிறுவன் ஒருவரையும் பயன்படுத்தினர். கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கிருஷ்ணசாமி வீட்டில் இரவு தூங்க சென்றார். அன்றைய தினம் விக்ரம் மற்றும் மைனர் சிறுவன் ஆகியோர் கிருஷ்ணசாமி வீட்டிற்குள் சென்றனர் .
வீட்டில் இருந்த பழம், பிஸ்கட் சாப்பிட்டு கிருஷ்ணசாமி தூங்குவார் என காத்திருந்தனர். வெகு நேரம் கடந்த பின்னர் கிருஷ்ணசாமி தூங்கி விட்டதாக நினைத்தனர். ஆனால் அவருக்கு செல்போன் அழைப்பு வந்த போது அவர் எழுந்து விட்டார். அங்கே விக்ரம் மற்றும் சிறுவன் இருப்பதை பார்த்து அவர் சத்தம் போட்டார். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து
தலையணை வைத்து முகத்தை பொத்தி கொல்ல முயன்றனர். ஆனால் அவர் தள்ளி விட்டார். இந்த நிலையில் 2 பேரும் அரிவாள், இரும்பு கம்பியால் கிருஷ்ணசாமியை தாக்கினர். ரத்தம் சொட்டிய நிலையில் இருந்த அவரை மிரட்டி பணம், நகை கேட்டனர். பின்னர் வீட்டில் இருந்த 5 கிராம் தங்க செயின், 6 பவுன் நகை, லேப்டாப், 2 வெள்ளி குத்து விளக்கு, 35 ஆயிரம் ரூபாய், அமெரிக்க டாலர், செல்போன் போன்றவற்றை கொள்ளையடித்தனர் .
வீட்டில் இருந்த காரை திருடி அதில் பொருட்களை போட்டு தப்பி செல்ல முயன்றனர். அப்போது கிருஷ்ணசாமி கூச்சல் போட முயன்றதால் கோபமடைந்த விக்ரம் மற்றும் மைனர் சிறுவன் ஆகியோர் அவரை கேபிள் ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பி சென்றனர். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை குண்டு வெடிப்பு வழக்கு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட விக்ரமிற்கு ஆயுள் தண்டனை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராகம் விதித்து தீர்ப்பளித்தார். இதில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெபமணி ஆன்ட்ரூஸ் விடுவிக்கப்பட்டார். மைனர் சிறுவன் தொடர்பான வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது.

Finally found a platform that doesn’t lag during peak hours. The game variety is impressive and the customer support is actually helpful. pk68vippk is definitely my new go-to.
Quick withdrawals are what I care about most and this place delivers. No long waiting times or weird requirements. I trust iddtg288 for my gaming sessions.
Нарколог на дом в Луганске — востребованный формат медицинской помощи для человека, которому требуется лечение алкогольной или наркотической зависимости без самостоятельной поездки в клинику. Вызов нарколога позволяет организовать лечение дома, провести осмотр пациента, оценить тяжесть состояния, выполнить первичную диагностику и определить, возможно ли лечение амбулаторно. Врач приезжает с необходимыми препаратами и оборудованием, контролирует давление, пульс, сознание и общее самочувствие. Домашнее лечение особенно удобно после запоя, при похмелье, абстинентном синдроме и интоксикации алкоголем. При тяжелых нарушениях врач рекомендует лечение в стационаре.
Подробнее – вызвать нарколога на дом