கோவையில் மாடலிங் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது…

திருப்பூரை சேர்ந்த 22 வயதான ஐடி நிறுவன இளம்பெண், கோவை சிங்காநல்லூரில் தங்கியிருந்தார். மாடலிங் ஆசையில் இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு முயற்சி செய்து வந்தார்.

தேசிய அளவில் மாடலிங் பயிற்சியாளர் எனக்கூறிய கோவையை சேர்ந்த ஜான் அமலன் (32) என்பவர் மாடலிங் பயிற்சி வழங்கி வந்தார். இவர் அந்த இளம் பெண்ணிடம் தேசிய அளவிலான பெரிய மாடலிங் போட்டிகள் மற்றும் விளம்பரங்களில் பங்கேற்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறிய பல்வேறு கட்டங்களாகச் சுமார் ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகும் கூறியபடி வாய்ப்புகளைப் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்த ஜான் அமலன். ஒருகட்டத்தில் அந்த இளம் பெண்ணிற்குத் தொடர்ச்சியாகக் கடுமையான பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்து உள்ளார்.

மாடலிங் பயிற்றுநரின் இந்த அத்துமீறலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண் சிங்காநல்லூர் போலீசில் புகார் தந்தார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இளம் பெண்ணிடம் பண மோசடி செய்தது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிங்காநல்லூரில் வசித்த ஜான் அமலனை போலீசார் கைது செய்தனர். இவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜான் அமலன், கட்சி தலைவர் ஒருவருடன் போட்டோ எடுத்து வைத்திருந்தார். இவரின் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *