நடிகர் ராம்சரண் டிஸ்சார்ஜ் கோவிலில் சுவாமி தரிசனம்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் அதிரடி ஹீரோவுமான ராம்சரண் நடித்த பெத்தி என்ற சினிமா படம் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் நடித்த போது ராம் சரணுக்கு இடது கை மணிக்கட்டில் தசை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து
ராம்சரண் கோவையில் உள்ள ஒரு எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கே இரண்டு நாள் சிகிச்சை பெற்றார் ஆபரேஷன் முடிந்த நிலையில் இன்று அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார் அவருடன் அவரது அப்பா நடிகர் சிரஞ்சீவி மற்றும் மனைவி குடும்பத்தினர் வந்திருந்தனர்.
சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ராம்சரண் தனது மனைவியுடன் சித்தா புதூர் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் பின்னர் அங்கே உள்ள கோசாலையில் பசுக்களுக்கு தீவனம் கொடுத்தார் அவருடன் ஏராளமான ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.
