K. V

கோவையில் ரோடு மறியல் செய்த விவசாயிகள் கைது

கோவை தென்னம்பாளையம் பகுதியில் உருக்கு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அண்ணா சிலை முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசார் 100 கற்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

Read More

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read More

கோவை வெஸ்டர்ன் பைபாஸில் சர்வீஸ் ரோடு ,பாலம்

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை 11.8 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. மைல் கல் பகுதியில் 30 கோடி ரூபாய் செலவில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகே தனியார் நிறுவனத்தின் கல்குவாரி பகுதியில் தரை மட்ட பாலம் மற்றும் சர்வீஸ் ரோடு உருவாக்கப்பட்டு வருகிறது. பெரிய பாறைகளை உடைத்து ரோடு போடும் பணி நடக்கிறது.

Read More

கோவை விமானத்தில் கண்ணாடி உடைத்தவருக்கு அபராதம்

கோவை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் இன்று காலை வந்தது. விமானத்திலிருந்து இறங்கி பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது பயணி ஒருவர் அவசரமாக வந்தபோது கண்ணாடி கதவை உடைத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் அமீது என்பது தெரிய வந்தது. அவர் அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத…

Read More

வெடிகுண்டு தேடிப் போனா சைனா பட்டாசு..

கோவை சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை தெருவில் ஒரு ஓட்டல் முன்பு வெடிகுண்டு இருப்பதாக புகார் இருந்தது. சாய்பாபா காலனி போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் இன்று காலை அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் கவரில் வெடிகுண்டு போல் ஒரு பொருள் கிடந்தது. அதை பரிசோதனை செய்து பார்த்தபோது அது சைனா பட்டாசு என தெரிவிக்கின்றது. யாரோ வெடிக்காத பட்டாசை தூக்கி வீசி சென்றிருந்தனர். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு என…

Read More

ஸ்கூட்டர் மானியம் கிடைக்கல..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுண்டக்கா முத்தூர் பகுதியை சேர்ந்த டீ வியாபாரி கிருஷ்ணசாமி என்பவர் தன் மனைவி பெயரில் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க அரசு துறையில் அனுமதி வழங்கப்பட்டது. ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் அனுமதி உத்தரவு இருந்தும் 25 ஆயிரம் ரூபாய் மானிய தொகை வழங்கப்படவில்லை. அரசாங்கம் மானியத் தொகை தரும் என சொந்தக் காசில் ஸ்கூட்டர் வாங்கி விட்டோம். இப்போது மானியம் தர மறுக்கிறார்கள். நான்கு ஆண்டாக அலைந்து ஏமாந்து போய் விட்டோம்….

Read More

ஊருக்குள் புகுந்த யானைகள்

கோவை குப்பனூர் வனப்பகுதியில் சுற்றிய யானைகள் தங்களது குட்டிகளுடன் நேற்று இரவு ஊருக்குள் புகுந்தனர். குடியிருப்பு பகுதியில் உலா வந்த யானைகளை வனத்துறையினர் ஜீப் மூலமாக விரட்டினார். சர்ச் லைட் வெளிச்சத்தில் பதறிப்போன யானைகள் தங்களது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தன.

Read More

பவுண்டரி கழிவால ரொம்ப கஷ்டங்க..

கோவை கண்ணம்பாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். இதில் கோவையின் பிரபலமான பவுண்டரி நிறுவனம் தங்களது கழிவுகளை சுத்தம் செய்யாமல் வெளியே விடுவதாக புகார் தெரிவித்தனர். கருப்பு புகையால் அந்த பகுதி மாசடைந்து வருகிறது. நீரில் கழிவுகள் மிதக்கிறது. நிலத்தடி நீரும் மாசாகி வருகிறது. இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..

Read More

கோவை கலெக்டர் ஆபீஸ் முன் மறியல் 130 பேர் கைது

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் சிஐடியு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழு மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்தல் குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் சம வேலைக்குசம ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது. இதில் மறியலில் ஈடுபட்ட 130…

Read More