K. V

ரேஷன் கார்டு வேண்டுமா

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்துார் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன . அதன் தொடர்ச்சியாக டிசம்பர்-2025 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் வருகின்ற 13.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்…

Read More

உங்களுக்கு ரேஷன் அரிசி வேண்டாமா. .

கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டைகளுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லை எனில், தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாகதங்களின் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக (NO COMMODITY CARD) மாற்றிக்கொள்ளலாம். இந்த தகவலை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

Read More

எஸ் ஐ ஆர் வேலை செய்ய மாட்டோம்..

பேரூர் பகுதியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எஸ் ஐ ஆர் என்கிற வாக்காளர் சுருக்கத் திருத்த பணிகளை செய்ய மாட்டோம் எனக்கூறி அரசு ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Read More

போலீசில் 13 வாகனங்கள் ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 8 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30.12.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும். . மேற்கண்ட 13 வாகனங்களும் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 29.12.2025 அன்று மாலை…

Read More

கோவையில் 50000 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 4,25,705 பயனாளிகளுக்கு ரூ.1000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.5,10,84,60,000/- (ரூபாய் ஐநூற்று பத்து கோடியே எண்பத்தி நான்கு இலட்சத்து அறுபதாயிரம்) தொகையானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான மகளிருக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மாவட்டத்தில் கடந்த ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம்பொதுமக்களிடமிருந்து…

Read More

மகளிருக்கு உரிமைத்தொகை காத்திருக்கு..

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா கோவையில் இன்று நடக்கிறது. ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர், தூய்மை பணியாளர் வாரிய தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர்,துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்,மண்டல குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டு வழங்க உள்ளார்கள்.

Read More

எஸ் ஐ ஆர் நீக்கம் 6 லட்சமாக அதிகரிக்கும்..!

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடக்கிறது, மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில் இறந்தவர்கள் 1,13,592 பேர், கணக்கெடுப்பின் போது இல்லாதவர்கள் (ஆப்சென்ட்) 76,096 பேர், வீடு, முகவரி மாறி சென்றவர்கள் 2,91,928 பேர், இரு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் 20,245 பேர், இதர வகையினர் 395 பேர் இருப்பதாக தெரியவந்தது. 5,02,256 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர்….

Read More

SIR தேதி மேலும் நீட்டிப்பு..

தமிழகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கிறது. இதில் பல மாவட்டங்களில் பணிகள் முடியவில்லை. ஏற்கனவே கடந்த நாலாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் இன்றுவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. ‌ இருப்பினும் பணிகள் முடியவில்லை. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

Read More

ஐடி பார்க் ஏரியாவில் யானைகள் ஜாலி வாக்..!

கோவை ஜீரணத்தம் ஐடி பார்க் அருகே உள்ள முட்புதர் காட்டில் மூன்று யானைகள் இன்று புகுந்தன. இந்த யானைகள் அந்தப் பகுதியில் உள்ள சாக்கடை குட்டையில் குளித்து நீராடி முள்காட்டுக்குள் ஜாலியாக வலம் வந்தன . பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த இந்த யானைகள் திரும்பவும் வனப்பகுதி செல்ல முடியாமல் ஊருக்குள் சுற்றுவதாக தெரியவந்துள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட முயன்ற போது திடீரென காணாமல் போய்விட்டன. யானைகளை தேடி வனத்துறையினர்…

Read More

ஓட்டு சின்னம் எல்லாம் அழிக்கிறாங்க

கோவை மாவட்டத்தில் 19523 ஓட்டு மிஷின்கள் கட்டுப்பாட்டு கருவிகள் தெற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.‌ இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓட்டு மிஷின்களில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் சின்னங்கள் இதர தகவல் அனைத்தும் அழிக்கும் பணி இன்று துவங்கியுள்ளது. ரீ செட்டிங் என்ற பெயரில் மொத்த தகவல்களும் நீக்கம் செய்யப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தும் வகையில் இந்த ஓட்டு மிஷின்கள் தற்போது மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 40 நாளில்…

Read More