கோவையில் drink and driving சோதனை தீவிரம்
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனங்கள் ஒட்டுவோர் மற்றும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை 7 நாட்கள் தொடர் சோதனை நடந்தது. இச்சோதனையின்போது, சந்தேக நபர்களை கண்டறிதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, துணை கமிஷனர்கள் கார்த்திகேயன் தங்கதுரை மகேஸ்வரன் தலைமையில் கடந்த ஆக., 24ம்தேதி (திங்கள்) காலை 5 மணி முதல் ஆக. 31ம்தேதி காலை 6 மணி தீவிர சோதனை நடந்தது.
மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் சரகத்திலும் உதவி கமிஷனர்களுடன், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் ஒருங்கிணைந்து இச்சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையின்போது, 8,761 பேரின் விவரங்கள் ‘பேஸ் ரெக்கனைசேஷன் தொழில்நுட்பம் (முகம் அடையாளம் காணும் செயலி) மூலம் ஆய்வுசெய்யப்பட்டது. மேலும், மது போதையில் வாகனம் ஓட்டிய 1146 பேர் கண்டறியப்பட்டு, தலா ரூ. 10 ஆயிரம் விதம், ரூ.1 கோடியே 14 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து தடுக்கவும் சிறப்பு சோதனை நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரித்திர பதிவேடு கொண்ட ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 410 ரவுடிகளை பிடித்து அவர்கள் அண்மை காலங்களில் ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா? சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா? என கண்டறியப்பட்டது. இதில், 15 ரவுடிகளிடம் பிணை பத்திரம் பெறப்பட்டது. தொடர்ந்து, அடிதடி போன்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், தலைமறைவாக இருந்த 8 பேர், ரவுடிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் மாநகரில் உள்ள 114 ஓட்டல் அறைகள், விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 605 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரு வார காலம் நடந்த இச்சிறப்பு தணிக்கையின்போது, உக்கடம் சரகத்தில் 1,123 பேர், ஆர்.எஸ்.புரம் சரகத்தில் 489 பேர், போத்தனூர் சரகத்தில் 1,595 பேர், குனியமுத்தூர் சரகத்தில் 1,141 பேர், காட்டூர் சரகத்தில் 1,006 பேர் சாயிபாபாகாலனி சரகத்தில் 1,776 பேர், சிங்காநல்லூர் சரகத்தில் 1631 பேர் என மொத்தம் 8761 பேர் பேஸ் ரெக்கனைசேஷன்’ தொழில்நுட்பம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில், 129 சந்தேக நபர்களின் கைரேகை பெறப்பட்டுள்ளது. அவர்களது பெயர். விவரங்கள் சேகரிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், நிலுவை வழக்குகள் கொண்ட நபர்கள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் ஆகியோரை கண்டறிய தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி சோதனை மூலம் மாநகரில் குற்றச்செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்து வருகிறது.

Really loving the game variety here. It keeps things exciting and the graphics are top notch. Definitely spending my weekends on phsmjili.