படிக்கணுமா குடிக்கணுமா..!கோவை புளியகுளத்தில் பரபரப்பு போஸ்டர்..

கோவை புலியகுளம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு மதுபான கடைகள் குறிப்பாக எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி கல்லூரிகள் உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் அதிகரிக்க என்ன காரணம் மாணவர்கள் படிக்க வேண்டுமா குடிக்க வேண்டுமாஇது புலிய குளமா சாராய குளமாஇதுதான் திராவிட மாடல் என்ற வாசகங்களுடன் நாம் தமிழர் கட்சியினர் புளியகுளம் மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில்…

Read More

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் மாயமான 2 சிறுமிகள் மீட்பு

கோவை, உக்கடம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு 2 சிறுமிகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாநகரில் ரோந்து சென்று பெண்களை கண்காணிக்கும் பிங்க் பெட்ரோல் வாகனத்தில் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் 2 சிறுமிகளையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கேரளா மாநிலம் வாளையார் அருகே உள்ள கஞ்சிக்கோடு பனங்காடு பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், விசாரணையில் அவர்கள் 17, 14 வயதுடைய அக்கா, தங்கை என்பதும்,…

Read More

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஓட்டு செயல் விளக்கம் முடக்கம்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3524 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சூலூர் ,மேட்டுப்பாளையம் ,தொண்டாமுத்தூர் வால்பாறை சிங்காநல்லூர், கோவை வடக்கு ,தெற்கு உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு போடுவது தொடர்பான செயல் விளக்கம் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதன்படி மாவட்ட வாரியாக ஆர்டீஓ அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டு பதிவு மெஷின், கட்டுப்பாட்டு மெசின் , சின்னம் காட்டும் மெஷின் போன்றவற்றை வைத்து பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு செயல்…

Read More

கோவை மாவட்டத்தில் சென்சிடிவ் ஒட்டு சாவடிகள் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடிகள் இருந்தது. சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி, தேர்தல் பிரிவினர் ஆலோசனை கூட்டத்தில் கடந்த கால வாக்காளர்கள் அடிப்படையில் அதிக ஓட்டு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 3117 ஓட்டு சாவடிகள் இருந்தது. தற்போது 446 ஓட்டு சாவடிகள் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டது. இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள் என 6.50 லட்சம் பேர் பட்டியலில்…

Read More

கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பதில் பின் தங்கும் தவெக கட்சி..

கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினர் அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தினர் எந்த அரசியல் வேலையும் செய்யாமல் ஒதுக்கி விட்டார்கள். ஜனநாயகன் படம் வரும் என கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். படம் ரிலீசாகாத அதிருப்தியில் கட்சியினர் சுணக்கி போய் விட்டார்களாம். படம் வந்திருந்தால் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் எழுச்சியுடன் வேலை செய்திருப்பார்கள். இப்போது ரொம்ப டல்லாக இருக்கிறார்களாம். என்ன செய்வது என தெரியாமல் பொறுப்பில்…

Read More

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நாளை முதல் ஏ ஐ கேமரா..!

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1671 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை . மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில்…

Read More

கோவையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி யானை சாவு..!

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் பகுதியில் கடந்த 25ம் தேதியன்று ஒரு விவசாய நிலத்தில் இருந்த 50 வயதான ஒரு பெண் யானை சேற்றில் சிக்கி தவித்தது. இது குறித்து தகவல் அறிந்த சென்ற வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கிரேன் மூலம் காட்டு யானையை சேற்றில் இருந்து மீட்டனர். பின்னர், அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் அந்த யானையின் உடல் நிலை தேறியதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி…

Read More

கோவையில் பரபரப்பு.. பழிக்கு பழி வாங்க வாலிபரை விரட்டி அரிவாளால் வெட்டிய ரவுடி

கோவை அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரது மகன் பார்த்திபன் (26). கூலி தொழிலாளி. கடந்த 2016 ஆம் ஆண்டு அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கபடி போட்டி நடந்தது. அப்போது அங்கே கபடி விளையாடி கொண்டிருந்த பார்த்திபனின் நெருங்கிய கூட்டாளியான ஸ்பைக் என்கிற நவீன் குமார் (25) என்பவருக்கும்அம்மன் குளம் பகுதியை சேர்ந்த ஜப்பான் என்கிற ஹரிஹரன் (30) என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது . இதில் ஹரிஹரன் தனது கூட்டாளிகளுடன்…

Read More

கோவை மாவட்டத்தில் 39 ஓட்டு சாவடிகள் நீக்கம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று இரவு நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகை வேல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரிவின் சார்பில், “கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சட்டமன்ற தேர்தலுக்காக கூடுதல்…

Read More

கோவையில் லவ் ஜோடி டூயட், டாய்லெட்க்கு பூட்டு

கோவை உக்கடம் வாலங்குளத்தில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பூங்கா உள்ளது. இங்கே இரண்டு நாட்களுக்கு முன் காதல் ஜோடி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது. செல்போனில் போட்டோ வீடியோ பார்த்து ஜாலியாக இருந்த இந்த ஜோடி திடீரென ஆண்கள் கழிவறையில் புகுந்தது. அங்கே பாட்டு சத்தம் கேட்க இடையிடையே வேறு சத்தமும் கேட்டது. சந்தேகமடைந்த ஸ்மார்ட் சிட்டி பூங்கா செக்யூரிட்டி கதவை தட்டி விசாரித்தார். அப்போது ஆண்கள் கழிவறையில் இருந்து இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் எட்டிப் பார்த்தார்….

Read More