பெண் உள்ளாடைகளை திருடிய சைக்கோ கும்பல்…

கோவை, சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எஸ் நகரில் உள்ள குடியிருப்புகளில்,வீட்டின் வெளியே துவைத்து காயப் போடப்பட்டு இருந்த பெண்களின் உள்ளாடைகள் மற்றும் உடைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மாயமாகி வந்தன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து பெண்களின் ஆடைகள் மட்டும் காணாமல் போனதால், அப்பகுதி பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது, இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தனர். அப்போது, இதுவரை…

Read More

கள்ளக் காதலியை கொலை செய்த வாலிபர் தந்தையுடன் கைது…

பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோடங்கிபாளையம் செல்லும் சாலையில், ஒரு தோட்டத்து பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது. கிணத்துக்கடவு போலீசார் பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளியை தேடி வந்தனர். கொலை நடந்த சாலையில் இருந்து இரண்டு நபர்கள் பைக்கில் பொள்ளாச்சியை நோக்கி செல்லும் காட்சியும், ஒட்டி செல்பவரின் முகமும் பதிவாகியிருந்தது. இதை வைத்து விசாரித்த போது பழனி முத்து(35) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பழனிமுத்துவின் தந்தை குருநாதனின்…

Read More

உக்கடம் பெரியகுளம் கரை உடையும் அபாயம்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் கரும்புக்கடையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வகையில் 5 ஆண்டிற்கு முன் குளக்கரையில் ரோடு போட்டார்கள். ஏற்கனவே இந்த பகுதி வாக்கிங் தளமாக இருந்தது. இதில் இருந்த இன்டர்லாக் கற்களை அகற்றி பின்னர் தார் ரோடு போட்டார்கள். உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணியின் போது இந்த ரோடு தான் பிரதானமாக மாற்று பாதையாக பயன்படுத்தப்பட்டது. 1.6 கி.மீ தூரம் அமைந்த இந்த ரோடு தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. சில வாகனங்கள் இந்த வழியாக…

Read More

ஆத்துப்பாலம் மயானத்தில் மனித மண்டையோடு, எலும்புகளை தோண்டி வீசும் அவலம்…

கோவை ஆத்துப்பாலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் பரப்பிலான மயானம் உள்ளது. கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மயானம் பயன்பாட்டில் இருக்கிறது. பல ஆயிரம் சடங்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியால் இங்கே சடலம் புதைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரிரு நபர்கள் சடலம் அடக்கம் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக இங்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமாதிகள் இருக்கிறது. அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சடங்கு செய்வதால் இவற்றை மாநகராட்சியினர் அகற்றவில்லை. மயானத்தில்…

Read More

சிறுவாணியில் மழை: நீர்மட்டம் உயர்வு

கோவை சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க பரப்பு 22.46 சதுர கிலோமீட்டர் . அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்ட தேக்க பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி, தற்போது 22 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் இன்னும் ஒரு மாதத்தில் அணையின் நிரம்ப வாய்ப்பு இருக்கிறது. தற்போது…

Read More

கோவையில் மக்கள் தொகை வீட்டு கணக்கெடுப்பு துவக்கம்

கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை வீட்டு கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. ஏற்கனவே இந்த கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக கடந்த மாதம் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் சுமார் 1.20 லட்சம் பேர் சென்சஸ் வெப்சைட்டில் தங்கள் வீடுகள் தொடர்பான சுய விவரங்களை பதிவு செய்தனர். https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் சுய தகவல்களை பூர்த்தி செய்தவர்களுக்கு 13 இலக்கு எண் கொண்ட மெசேஜ் வந்துள்ளது. இதில்…

Read More

கோவை ஜி. எச் எக்ஸ்ரே பிரிவு ஏக மோசம்

கோவை அரசு மருத்துவமனையின் எம்எம் பிளாக்கில் எக்ஸ்ரே பிரிவு உள்ளது.இந்த பகுதியில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இங்கே எக்ஸ்ரே பிலிம் மற்றும் ஆவணங்கள் பராமரிப்பு பகுதி பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியை புதுப்பித்து தர வேண்டும். பொதுமக்கள் நோயாளிகள் உட்காருவதற்கு போதுமான நாற்காலிகள் அமைக்கப்படவில்லை.மேலும் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சரில் அலைத்து சென்று வருவதற்கும் இந்த பகுதியில் இடையூறு இருக்கிறது.எனவே புதிய வார்டு அல்லது நோயாளிகள் தொந்தரவு இல்லாத பகுதியில் எக்ஸ்ரே…

Read More

மண்டை மீது விழுமோ மரம், ஜி. எச் முன் மக்கள் அச்சம்

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரிய புங்கன் மரங்கள் இருக்கிறது குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு முன்பு இருந்த மரம் கீழே விழும் அபாயத்திலிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த மரத்தின் கிளைகள் சமீபத்தில் வெட்டி அகற்றப்பட்டது. இதேபோல் மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் புங்கன் மரம் இருக்கிறது. இந்த மரம் சாய்ந்து விழும் நிலையில் இருக்கிறது. மரத்தின் பாதி பகுதி காய்ந்து விட்டது. இது உடைந்து விழும் அபாயம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு கிளை விழுந்து விட்டது….

Read More

தங்கம், வெள்ளி கொள்ளை

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (38). இவரது பெற்றோர் கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே. நகரில் வசித்து வருகின்றனர். கடந்த ஜூலை 11 ம் தேதி, பாக்கியலட்சுமியின் பெற்றோர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். இதனால், வீட்டை பராமரிப்பதற்காகப் பாக்கியலட்சுமி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 28-ம் தேதி மதியம் வீட்டிற்குச் சென்று சுத்தம் செய்துவிட்டு வந்த பாக்கியலட்சுமி மீண்டும் ஜூலை 30-ம் தேதி காலை…

Read More

சிறார்களை பிச்சை எடுக்க வைத்த 2 பேர் கைது

கோவையில் சிறுவர்களை பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் சிலர் சிறுவர்களை வைத்து பிச்சை எடுக்க வைப்பதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சூர்யமணி (25) என்பவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் பேனா விற்பது போல நடித்து, பொதுமக்களிடம்…

Read More