கோவை மாவட்ட எல்லையில் கனிமம் கடத்தல் கண்டறிய கேமரா

கோவை வழியாக கேரளாவிற்கு ஜல்லி கற்கள், செம்மண் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை, வருவாய் துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக கோவை-கேரள மாநில எல்லைகளான வாளையாறு, வேலாந்தாவளம் உள்பட 16 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர ஊரக பகுதிகளான பேரூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சூலூர் உள்பட குவாரிகள், செம்மண் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள்…

Read More

கோவையில் அனுமதியற்ற போஸ்டர்களை கிழிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

கோவை மாவட்டத்தில் அரசு துறை, அரசு சார்பு துறைகளின் சுவர்கள், பொது இடங்கள், மேம்பால சுவர்கள், மின்சார கம்பங்கள், மரங்கள் என ஏகப்பட்ட இடங்களில் அரசியல் கட்சி அறிவிப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் அதிகமாகி விட்டது. மேம்பால சுவர்களில் கட்சிகளின் போஸ்டர்கள் அதிகமாகி விட்டது. கலெக்டர் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், தெற்கு, வடக்கு தாசில்தார் அலுவலகம், ஜிஎச், பொதுப்பணித்துறை அலுவலகம் என ஏகப்பட்ட அலுவலகங்களில் போஸ்டர்கள் அகற்றிய பின்னரும், மீண்டும் கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக புகார்…

Read More

கோவை மாவட்ட வங்கிகளில் தேர்தலுக்காக அதிக பண பரிவர்த்தனை குறித்து விசாரணை..!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்ட வருகிறது .தேர்தல் கமிஷன் உத்தரவின்படி மாவட்ட அளவில்முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் மூலமாக கடந்த ஆறு மாதங்களில் அதிக அளவு பணம் ஷேர் செய்யப்பட்ட வங்கி அக்கவுண்ட் மற்றும் அதிக நபர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட அக்கவுண்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆறு மாத கணக்கு விவரங்களை வங்கி நிர்வாகங்கள் மாவட்ட தேர்தல் பிரிவு வசம்…

Read More

கோவையில் தெர்மோகோல் குடோனில் தீ..! பயங்கர புகையால் மக்கள் தவிப்பு

கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதி பகுதியில் காசி விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான குடோனில் இன்று மதியம் திடீரென தீ பிடித்தது. இந்த குடோனில் தெர்மோகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கணபதி தீயணைப்பு நிலையம் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த…

Read More

தீ , விபத்து , விஷம்.. அபாயங்களை தடுப்பது எப்படி..!?

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடந்தது. இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விஸ்வநாதன், பூங்கோதை, பிரதீபா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேந்திர குமார், அனிதா, செந்தில்குமார் , விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் டிரைவர்கள், லைசன்ஸ் பெற வந்தவர்களுக்கு 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலமாகபாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவி செய்யும் முறை குறித்து விளக்கம்…

Read More

நொய்யல் அழகாகுமா.. ரூ. 178 கோடியில் புது திட்டம் ..!

கோவை நொய்யல் ஆற்றை நகர்ப்பகுதியில் 4.3 கிலோமீட்டர் தூரத்திற்கு சுத்தப்படுத்தி சீரமைக்க 178 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மாதிரி வடிவத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கோவை நொய்யல் ஆறு 127 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கிறது ‌. நொய்யல் ஆறு பாயும் வழி எங்கும் சாக்கடை நீர் சாயக்கழிவு தொழிற்சாலை கழிவு என ஏகப்பட்ட கழிவு நீர் குடலை குமற்றும் நாற்றத்துடன் பாய்கிறது. இதைத் தடுக்காமல் நகரப்…

Read More

அதே இடம் அதே மறியல்.. அட போங்கப்பா.!

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் எதிரே சாந்தி தியேட்டர் முன்பு நேற்று வாலிபர் ஒருவர் பஸ் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார் . தனது இட பிரச்சனைக்கு போலீசில் புகார் அளித்தும் தீர்வு காணவில்லை என அவர் ஆவேசமாக போராடினார். இன்று அதே போல் வாலிபர் ஒருவர் அதே இடத்தில் டவுன் பஸ்ஸை மறித்து திடீர் போராட்டம் நடத்தினார். சினிமா தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்கிறார்கள் . எப்படி படம் பார்ப்பது இதை யாரும்…

Read More

‘குறைந்த ஓட்டு’ ஏரியாக்களில் இனி இருக்குது கவனிப்பு..!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் கடந்த 2021ம் ஆண்டில் 46,42,228 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அப்போதைய தேர்தலில் 33,55,447 பேர் அதாவது 72.30 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர். இதில் அதிமுகவினர் 15,10,170 ஓட்டு பெற்றனர். அதாவது 45 சதவீதம் ஓட்டு பெற்றிருந்தனர். திமுக 10,39,430 ஓட்டுக்கள் (31 சதவீதம்), மக்கள் நீதி மையம்” 2,46,671 ஓட்டுக்கள் (7.4 சதவீதம்), நாம் தமிழர் கட்சி 1,85,357 (5.5 சதவீதம்) ஒட்டுக்கள், இந்திய…

Read More

போதை நபரை தாக்கிய பெண்கள்..

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அரசு டவுன் பஸ்ஸில் ஏறிய சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அங்கே இருந்த பெண்களிடம் ஆபாச முறையில் பேசியதாக தெரிகிறது. கோபமடைந்த பெண்கள் பஸ்ஸில் வைத்து அவரை சரமாறியாக தாக்கினார். பின்னர் அவரை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டனர். ரேஸ் கோர்ஸ் போலீஸில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் பகுதியில் ரத்த காயம் உடன் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினார்களா அவரை…

Read More

ஏய் ஏறி வாயா, விடாத.. பயர் மேன்களுக்கு பயிற்சி..

கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மண்டல அளவில் 41 தீயணைப்பு துறையினருக்கு கமாண்டோ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றை நீந்தி கடப்பது, உயரமான கட்டடங்களில் ஏறுவது, அபாயகரமான கட்டடங்களில் ஆட்களை மீட்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று அலுவலகத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் கயிறு மூலமாக ஏறும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் மயக்கமடைந்தவர்களை கயிறு மூலமாக கீழே இறங்குவது குறித்த செயல் விளக்கமும் காண்பிக்கப்பட்டது.

Read More