கோவையில் வாக்குச்சாவடிகளுக்கு ‘கலர் கோடிங்’

கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஒரே பள்ளி கூட வளாகத்தில் ஐந்து முதல் எட்டு வாக்குச்சாவடிகள் அமைந்திருப்பதாக தெரிகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட வேண்டும் என தெரியாமல் குழப்பம் அடையும் நிலைமை இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஒரே வளாகத்தில் உள்ள ஓட்டுச் சாவடிகளை அடையாளம் காணும் முறையில் வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. அந்தப் பகுதியில் வாக்குச்சாவடிகளுக்கான வரிசை எண் அமைத்து…

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்களில் ‘கேண்டிடேட் செட்டிங்’ பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பேலட் பேப்பர் வந்து வந்துவிட்டது….

Read More

கோவையில் 80 லட்ச ரூபாய் மோசடி: இரண்டு பேருக்கு 10 ஆண்டு சிறை…!

ஈரோட்டை சேர்ந்தவர்ஸதர்மலிங்கம் (45). திருப்பூரை சேர்ந்தவர் கணேசன் (50). இவர்கள் இருவரும் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ் மற்றும் வெற்றி முருகன் சிட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் இவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கினர். இவர்களிடம் கோவையை சேர்ந்த முதலீட்டாளர்கள் உட்பட 130 பேரிடம் 80 .57 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த…

Read More

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகை: போக்குவரத்து மாற்றம்

கோவைக்கு வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவுள்ளனர். அன்றைய தினம் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரக்கில் மாற்றம் செய்யப்படும். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி ஆவணங்கள் பொருட்கள் குவிப்பு…!

கோவை மாவட்டத்தில் 3563 வாக்கு சாவடிகளில் வரும் 23ஆம் தேதி வாக்கு பதிவு நடக்க உள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட வகையான தேர்தல் ஆவணங்கள் , ரகசிய பேப்பர் ,சீல், அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து மூன்று லாரிகளில் 34 வகையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் வந்து…

Read More

கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 18,753 தேர்தல் பணி அலுவலர்கள் தபால் ஓட்டு போட விண்ணப்ப படிவம் வழங்கி வாங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய தபால் ஓட்டு சீட்டுகளை பூர்த்தி செய்து இன்று நடந்த பயிற்சி வகுப்பில் ஒட்டு சாவடி…

Read More

கோவையில் இலை வியாபாரி கொலை: மனைவி மகன் கைது

கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (46 ). வாழை இலை வியாபாரி .இவர் மனைவி பூங்கொடி (43) இவர்களது மகன் அருண்குமார் (21) மற்றும் விஷ்ணு பிரசாத் (18.. விஜயகுமாருக்கு மது போதை பழக்கம் உள்ளது . தினமும் அவர் மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் தனது வீட்டில் வழக்கம் போல் மது போதையில் வந்து தகராறு செய்தார்….

Read More

கோவையில் 10.18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்…!

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை செய்தனர் . பீளமேடு கொடிசியா பகுதியில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 கிலோ எடையில் தங்க நகைகளும் 8.5 கிலோ எடையில் வெள்ளி நகைகளும் இருந்தது. இந்த நகைகளுக்கான ஆவணங்களை கேட்டபோது அவர்கள் தரவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் பிரிவினர் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே நகைகள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து விட்டனர். இதைத்…

Read More

கோவை கோவை மாவட்டத்தில் மகளிர், யூத் ஓட்டு சாவடிகள்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு சாவடிகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பவன்குமார், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகை வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள், 183 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் இருக்கிறது. இந்த ஓட்டு சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். குடிநீர், உப்பு சர்க்கரை கரைசல், மருத்துவ குழு…

Read More

கோவையில் 8463 தபால் ஓட்டு பதிவு…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மாற்று திறனாளிகள் மற்றும் 85 வயது கடந்தவர்கள் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் 85 வயதிற்கு மேற்பட்ட 7583 வாக்காளர்கள், 1692 மாற்று திறனாளிகள் தபால் ஒட்டு போட விண்ணப்ப படிவம் 12 டீ பூர்த்தி செய்து தந்தனர். இவர்களுக்கு ஏற்கனவே தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தபால் ஓட்டு சீட்டு மாவட்ட அளவில் பெறும் பணி நடந்தது. இதற்காக…

Read More