கோவை வடக்கு தொகுதி மக்களுக்கு வழிகாட்டும் அதிமுக..!

கோவை வடக்கு தொகுதி வட்டாரத்தில் அனைத்து பகுதி மக்களின் நம்பிக்கை முகமாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் வலம் வருகிறார். தீவிர அரசியலில் இருந்து விலகி பின்னர் தீயாய் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். சீரநாயக்கன்பாளையம் , வடவள்ளி, மருதமலை, பொம்மனாம்பாளையம், ஓனாப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். உடல் நலம் பாதித்தவர்களுக்கு, கல்வி கற்க வழியில்லாதவர்களுக்கு உதவி வருகிறார். பொம்மனாம் பாளையம் தேவராஜ் என்பவர்…

Read More

போதை காளான் ருசித்து கொடூரமாக தாக்கிய கும்பல்..!

கோவை கணபதி பகுதியில் ரோட்டோரம் நேற்று இரவு 5 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் .திடீரென இந்த வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். ஒருவர் மீது இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கி ஓடவிட்டு உதைத்தனர். தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து நடுரோட்டில் தூக்கி வீசினர். இந்த கொடூர காட்சியை பார்த்து அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர். அந்தப் பகுதியில் வசித்த சிலர் ஓடி வந்து…

Read More

டொமோ காட்ட ஓட்டு மெஷினை அனுப்பியாச்சு..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு பதிவு மெஷினில் ஓட்டு போடும் முறை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள , ஓட்டு போட பயிற்சி எடுத்துக் கொள்ள இன்று முதல் டெமோ காட்டப் போகிறார்கள். இதற்காக கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாக சேமிப்பு குடோனில் வைக்கப்பட்டிருந்த ஓட்டு மிஷின்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு தொகுதிக்கு 30 மெசின் என 300 மெஷின்கள் அனுப்பப்பட்டது. முக்கிய இடங்களில்…

Read More

Training Programme for Newly Recruited Survey Personnel Inaugurated in Coimbatore

Coimbatore, January 21, 2026: A training programme for 62 newly recruited Surveyors and Draftsmen was inaugurated in Coimbatore district on Tuesday at Christ the King Polytechnic College, Othakalmandapam. The programme commenced with the lighting of the ceremonial lamp by the Regional Deputy Director of Survey, G. Mohan, in the presence of Assistant Director of Survey…

Read More

ஏன் குப்பை எடுக்கல.. இந்த 5 லட்ச ரூவா பைன்..

கோவை நகரில் பல இடங்களில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. தெருநாய்கள் , பெருச்சாளிகள் குப்பையை கிளறிக் கொண்டிருக்க மக்கள் தொடர்ந்து புகார் அளித்து புலம்பி கொண்டிருக்கிறார்கள். இன்று கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஜிவி ரெசிடென்சி , சவுரிபாளையம் பகுதியில் சுற்றிப் பார்த்தபோது ரோட்டோரம் குப்பை குவிந்து கிடந்தது . இது தொடர்பாக விசாரித்தவர் குப்பையை அகற்ற வேண்டிய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு அதிரடியாக ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இங்கே…

Read More

ரேஷனில் வாங்காம கிடக்குது ரூ.12.30 கோடி.. 41 ஆயிரம் பேரை காணோம்..!

கோவை மாவட்டத்தில், 1401 ரேஷன் கடைகள் உள்ளது. மாவட்ட அளவில் 11,20,965 அரிசி வாங்கும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. அத்துடன் தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒரு கார்டிற்கு 3 ஆயிரம் ரூபாய் என அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை கடந்த 8ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. மாவட்ட…

Read More

எப்படி ஆக்சிடென்ட் நடக்குது… போலீசுக்கு கிளாசு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் மாவட்ட அளவில் நடக்கும் விபத்துக்கள் தொடர்பான போட்டோ வீடியோ ஆதாரங்களுடன் பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் மனிதர்கள் ரோட்டை கடக்கும்போது செய்யும் தவறுகள் அதனால் ஏற்படும் விபத்துக்கள் . வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி செயல்படுவதால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பான காட்சி பதிவுகள் காண்பிக்கப்பட்டது. பல்வேறு பகுதியிலிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்த்த போலீசார் எப்படி எல்லாம் வாகனத்தை ஓட்டுறாங்க எப்படி எல்லாம்…

Read More

கையிலே கலை வண்ணம்.. எல்லாம் மாணவர்கள் எண்ணம்..!

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கையால் தயாரித்த கைவினை பொருட்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் எளிதில் மக்கும் பொருட்கள் மற்றும் சில வீட்டு உபயோக பொருட்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட பொருட்களை வைத்து அழகான கலை நயமிக்க காட்சி பொருள்களை உருவாக்கியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட கைவினைப் பொருள்கள் அலங்காரத்துடன் வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

Read More

ஓட்டு போடறது எப்படிங்க..? டெமோ மிஷன் வருதுங்க..

கோவை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக சட்டமன்ற தேர்தலுக்காக 5463 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு ஓட்டு போட பயிற்சி வழங்கவேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தற்போது ஓட்டு மெசின்கள் சரி பார்ப்பு பணி முடிந்தது. இதில் பயன்படுத்தும் நிலையில் 19,117 மெசின்கள் இருப்பதும், பழுதான நிலையில் 397 மெசின்கள் இருப்பதும் தெரியவந்தது….

Read More

அவிநாசி ரோட்டில் புதுசா நடை மேம்பாலம்..

கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் 1671 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் பாதசாரிகள் கடப்பதற்கு எந்த இடங்களிலும் கடவு பாதை அமைக்கப்படவில்லை. ரோட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மேம்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, தனியார் நிறுவனங்கள் மூலமாக நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் நடை…

Read More