கோவை மேற்கு பைபாஸ் ரோடு திறப்பு விழாவுக்கு தடை…!

கோவை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை ரூ.250 கோடி ரூபாய் செலவில் 11.80 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைபாஸ் ரோடு திறப்பு விழா திட்டத்தில் இடம்பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் பெரியார் நூலகம் உள்பட பல்வேறு திட்டங்கள் துவக்கப்படவுள்ளது. இந்த பட்டியலில் பைபாஸ் ரோடு சேர்க்கப்படவில்லை . கோவையின் பெரிய திட்டமாக பைபாஸ் ரோடு இருக்கிறது. ஜிடி நாயுடு பாலத்திற்கு பின்னர்,…

Read More

கோவையில் முதியவர் கழுத்து அறுத்து தற்கொலை..!

கோவை அடுத்து உள்ள கோவைப்புதூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சோமுராஜ் (77). இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. சோமுராஜ் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அதற்கு பயன்படுத்திய கயிறு அறுந்து விட்டது. அதன் பிறகு, சமையல் அறைக்கு சென்ற சோமுராஜ் அங்கு…

Read More

கோவையில் ஹார்ன் பில் ‘வாக்கு வீரன்’ லோகோ இன்று அறிமுகம் ..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்கள் ஓட்டு போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘வாக்கு வீரன்’ என்ற பெயரில் ஹார்ன்பில் பறவை உருவம் கொண்ட லோகோ உருவாக்கப்பட்டது . இந்த லோகோ இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் 75 சதவீதம் அளவிற்கு கூட ஓட்டுப்பதிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து ஓட்டு சதவீதம் குறைவாகவே இருந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது அடிப்படை தேவைகள் நிறைவேறவில்லை. நீண்ட காலமாக…

Read More

கோவை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறதாக இன்று இமெயில் மூலம் மிரட்டல் வந்திருந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாநகர வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்பநாய் உடன் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்தனர். நீதிமன்ற கூடம் மற்றும் வளாகத்தில் பல மணி நேரம் இந்த சோதனை நடந்தது ‌ . இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக கோவை நகர் பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர்…

Read More

கோவையில் வேட்பாளர்களே தெரியவில்லை.. அட்வான்ஸ் பிரச்சாரம்..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் பிரச்சார பணிகளை துவக்கியுள்ளனர். குறிப்பாக மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் இரவு நேர பிரச்சாரம், தெரு முனை பிரச்சாரம், சாதனை விளக்க பிரச்சாரம் போன்ற பல்வேறு வகை பிரச்சார நிகழ்வுகள் பரவலாக நடக்கிறது. வேட்டாளர்கள் யார், கூட்டணியில் யார் யார் என தெரியாத நிலையிலும் உத்தேசமாக சில கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படவில்லை. இந்த நேரத்தில் பிரச்சாரம் செய்ய நேரம்…

Read More

கோவை நெகமம் இரட்டை கொலை கைதான வாலிபர் பகிர் வாக்குமூலம்..

கொலை செய்யப்பட்ட சிறுமி கோவை நெகமம் அருகே உள்ள கொண்டே கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் பூபதி. இவரது மூத்த மகள் ஹரிதா(19). இரண்டாவது மகள் கௌசி (17). கௌசியை அந்த பகுதியை சேர்ந்த அபிஷேக் ( 24) என்பவர் காதலித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற அபிஷேக் இளம் பெண்ணின் பாட்டி மயிலாத்தாள் (65) என்பவரிடம் பேத்தியை திருமணம் செய்து தர வேண்டும்…

Read More

கோவையில் தொழிலாளி அடித்து கொலை: 3 பேர் கைது

பெரியநாயக்கன் பாளைய பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (40). கூலி தொழிலாளி. கடந்த 15 ம் தேதி பெட்டதாரதாபுரம் அண்ணா நகர் காட்டுப்பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன் மது குடித்துள்ளார். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தோணியை கைகளாலும் கட்டையாலும் தாக்கி உள்ளனர். அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினரிடம் செல்போனில் அழைத்து அந்தோணி மயக்கமடைந்து கிடப்பதாக…

Read More

கோவையில் அம்மா சிலையை மறைத்து அதிமுக நிர்வாகிகள் அசத்தல் போஸ்..!

கோவை ஓசூர் ரோடு இதய தெய்வம் அணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா இன்று நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், கே ஆர் ஜெயராம் , முன்னாள் அமைச்சர் செ ம வேலுச்சாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அவிநாசி ரோடு அண்ணா சிலை பகுதியில் உள்ள ஜெயலலிதா முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

Read More

வாக்காளர் பிரச்சனை தீர்க்க ஹெல்ப் டெஸ்க் 1950..

தமிழக அளவில் வாக்காளர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஹெல்ப் டெஸ்க் என்ற வாக்காளர்கள் உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் நேற்று துவக்கப்பட்டது. இதில் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா. பட்டியலில் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் தருகிறார்கள்.

Read More

கோவை கிணத்துக்கடவு மயானத்தில் சடலம் அடக்கம் செய்ய தொந்தரவு பொதுமக்கள் புகார்

கோவை கிணத்துக்கடவு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள சிக்கலாம்பாளையம், அண்ணாநகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளுக்கு கிணத்துக்கடவு சொலவம்பாளையம் கிராமத்தில் மயான இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் எங்கள் வழக்கப்படி பல தலைமுறைகளாக இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றோம். இடமானது அரசு ஆவணங்களில் அரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என பதிவாகி உள்ளது. மயானத்திற்கு ஆரம்ப காலத்தில்…

Read More