விஜய்யை நம்பியும் கட்சியை கலைத்தோம்.. கோவையில் பாரத மக்கள் முன்னேற்ற கழகம் புலம்பல்..!

பார்த மக்கள் முன்னேற்ற கழகம் (பாமமுக) கடந்த ஆண்டு தவெகவுடன் இணைந்தது. கட்சியை கலைத்து விட்டு அந்த கட்சியில் இருந்த அனைவரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார்கள். இந்த நிலையில் நேற்று, நாங்கள் இனி தவெகவுடன் இருக்க மாட்டோம் மீண்டும் தாய் கழகமான பாரத மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கி விட்டோம். பிரிந்து சென்ற நாங்கள், திரும்ப ஒன்றாக வந்து விட்டோம் என அந்த கட்சியின் மாநில தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார் ….

Read More

கோவையில் இளம் பெண்ணுக்கு லவ் டார்ச்சர்.. வாலிபர் மீது வழக்கு

கோவையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு படித்தார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வந்த நந்தகுமார் (24) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நந்தகுமார் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதை ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து நந்தகுமார் அவரை காதலிப்பதாக டார்ச்சர் செய்து வந்தார். இதில் கடுப்பான மாணவி பல்கலைக்கழக டீன்…

Read More

கோமாரியில் 30 ஆடுகள் செத்துப் போச்சு.. கோவை கலெக்டர் ஆபீசில் தொழிலாளி கண்ணீர் புகார்..!

கோமாரியில் 30 ஆடுகள் செத்து நான்கு ஆண்டுகளாக உதவி வழங்காமல் ஏமாற்றுவதாக கோவை கலெக்டர் ஆபீஸில் தொழிலாளி ஒருவர் இன்று கண்ணீருடன் புகார் அளித்தார். கோவைதொண்டாமுத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலன். 65 வயதான இவர் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். கொரோனா நோய் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் இவரது ஆடுகளுக்கு கோமாரி என்ற வாய் சப்பை நோய் தாக்குதல்…

Read More

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல்..!

வாடகை கேட்டுவிட்டு போறியா என கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் வயதானவர் மீது தாக்குதல் நடத்தியது இன்று பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வயதான நபர் மற்றும் பெண் ஒருவர் ஆட்டோவில் செல்வதற்காக வாடகை குறித்து இன்று காலை விசாரித்தனர் அப்போது ஆட்டோ டிரைவர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் வாடகை தொடர்பாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவருக்கு உதவியாக வந்த…

Read More

பாரம்பரிய மருத்துவம் போலியா..? கோவையில் பாரம்பரிய வைத்தியர்கள் போராட்டம்..!

இந்திய பாரம்பரிய வைத்தியத்தை போலி என சொல்வதா, 15 லட்சம் பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட மாட்டோம் எனக்கூறி சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மூலிகை தாவரங்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைக்கான மருந்துகளுடன் பாரம்பரிய வைத்தியர்கள் நூதனமாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் இளங்கோவன் நாகராஜ் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Read More

வெள்ளிங்கிரி மலையில் பெண் பக்தர்கள் அதிகரிப்பு..!

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை சீசன் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் பல்லாயிரம் பேர் மலையேறி வெள்ளிங்கிரி சுவாமியை தரிசனம் செய்து வந்துள்ளனர். கூட்டம் அதிகம் ஆகி வரும் நிலையில் பக்தர்களை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பக்தர்களுக்கு மருத்துவ குழு மூலமாக ரத்த அழுத்தம் பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை விட இந்த முறை பெண்கள் அதிகமாக மலையேறி சாமி தரிசனம்…

Read More

கோவை மாவட்டத்தில் 5 ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு 21.43 கோடி ரூபாய்க்கு உதவி..!

கோவை மாவட்ட ற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மூன்று சக்கர சைக்கிள்கள், குழந்தைகளுக்கான நடைவண்டி, மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தையல் எந்திரங்கள், காதொலிக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 21.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து கலெக்டர் பவன்குமார் கூறுகையில்,” கோவை…

Read More

கோவை மாவட்டத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, ” ஒரு நாளில் மட்டும் பல ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு அரசியல் கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விஜய் இருக்கிறார். யாருக்கும் இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக, ஆன்லைன் மூலமாக…

Read More

கோவை மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் நிலவரம்; தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் இன்று வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் (எஸ்ஐஆர்)தொடர்பாக ஆய்வு நடத்தினார். கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள், நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் குறிப்பாக இறந்து போனவர்கள், ஆப்சென்ட் ஆனவர்கள் முகவரியில் இல்லாதவர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்தார் . மேலும் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அடுத்து வெளியாக உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் பணிகள்…

Read More

கோவையில் வரும் 8ம் தேதி குரூப் 2 தேர்வு..!

கோவை பெரிய கடை வீதிக செயின்ட் மைக்கேல்ஸ் மேல்நிலைபள்ளியில் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கு (தொகுதி-|| மற்றும் || A பணிகள்) தேர்வு நடத்தப்படும். வரும் 8ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடத்தப்படும். ஓஎம்ஆர் வகையில் கேள்விகள் கேட்கப்படும். 331 தேர்வர் பாடத் தாள் II பொதுப் படிப்புகள் பொது நுண்ணறிவு பகுத்தறிவு தேர்வு எழுதவுள்ளனர். அன்றைய தினம் 348 தேர்வர் மதியம் 2.30 மணி முதல்…

Read More