வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் கல்வித் திறன், ஆராய்ச்சி, புதுமை, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் உயிரித் தொழில்நுட்பம், சமூக அறிவியல், உணவுத் தொழில்நுட்பம், வேளாண் வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியலின் பிற வளர்ந்து வரும்…

Read More

கோவையில் அம்மா உணவகங்களில் 87.30 லட்ச ரூபாய்க்கு விற்பனை

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 இடங்ளில் அம்மா உணவகங்கள் உள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களில் 87.30 லட்ச ரூபாய்க்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அம்மா உணவகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 12 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சிங்காநல்லூர்,…

Read More

சாய்பாபா காலனி மேம்பால சர்வீஸ் ரோடு துண்டிப்பு… மாநகராட்சியால் மக்கள் தவிப்பு

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு 74 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் உரிய கால அவகாசத்திற்குள் பணி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பகுதியில் புதிதாக தார் தளத்துடன் தரமாக ரோடு போடப்பட்டது. இன்னொரு புறம் ரோடு பணி நடத்த திட்டமிட்ட நிலையில், புதிய தார் ரோட்டை மாநகராட்சியின் சார்பில் சூயஸ் நிறுவனத்தினர் 24…

Read More

கிரைண்டர் கோட்டையான பாப்பநாயக்கன்பாளையம்…

குளம், குட்டை, காடு, மேடாக இருந்த ஊரு, ‘கிரைண்டர் கோட்டையாக மாறியது எப்படி தெரியுமா..?. இந்த ஊரு வந்த கதை தெரியுமா… அந்த காலத்தில், அதாவது 1710 வருஷம் கோவையில் விடாம மழை கொட்டிட்டு இருந்துச்சாம் அப்போது அங்கே ஒரு வீடு, இங்கொரு வீடாக ஜனங்க வாழ்க்கை நடத்திட்டு வந்தாங்க. பொதுவா மேடா இருக்கிற பகுதியில் தான் ஜனங்க வீடு கட்டு வாழறது வழக்கம். காத்து, மழையை தாங்குகிற வசதி இருக்கிறதா நம்பி ஜனங்க மேட்டு காட்டுல…

Read More

பானைகளில் புதைந்த காசுகள்

வெள்ளலூரில் கி.பி. 1842ம் ஆண்டில் ஒரு விவசாய நிலத்தை தோண்டியபோது பானை பானையாக 1213 காசுகள் கிடைத்தன. இந்த காசுகள் 170 ஆண்டுகளுக்கு பின் தொல்லியல் துறைக்கு கிடைத்து. இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சியில் இந்த காசுகள் அகஸ்டஸ், திபிரியெஸ் காலத்தை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. பொள்ளாச்சி வட்டாரத்தில் பட்டளை கிராமத்தில் கி.பி 1800ம் ஆண்டின் ரோமன் நாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவையும் பானையில் புதையலாக கிடைத்தவை. பல்லடம் சாவடிபாளையத்தில் பெருங்கற்கால சின்னத்தில் மண் குடுவையில் முத்திரை…

Read More

காலங்களைக் கடந்த அரசு கலைக் கல்லூரி…

திண்ணை பள்ளியில் மட்டுமே கல்வி என்றிருந்த கால கட்டம் அது. 1852ம் ஆண்டில் ஆங்கில மொழி பள்ளி அமைக்கப்பட்டது. இந்த பள்ளியை நிறுவியவர் கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய இ.பி.தாமஸ். ஆரம்ப காலத்தில் இது தாமஸ் பள்ளி என அழைக்கப்பட்டது. கடந்த 1861ம் ஆண்டில் இது நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது. டி.ஜி.டேவிஸ் என்பவர் நடுநிலைப்பள்ளி தலைவராக பதவி வகித்தார். 1864-65ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக அந்தஸ்து பெற்றது. 1868ம் ஆண்டில் கல்லூரியாக மாறியது.இதற்கு கோவைக்கல்லூரி என பெயர் வைக்கப்பட்டது. அப்போது,…

Read More

பட்டி, கரை, மடை ஊர்கள் உருவான வரலாறு…

கொங்கு வட்டாரத்தில் பாளையம், பள்ளி, ஊர், மடை, கரை என முடியும் கிராமங்கள் அதிகம். இந்த பெயர்கள் பஞ்சாயத்து சபையில் உருவாக்கப்பட்டதல்ல. ஆதி காலத்தில் தொழில், கலை, பண்பாடு, கலாச்சாரம் அடிப்படையில் ஊர்கள் உருவானது. பாப்பநாயக்கன்பாளையம், சீரநாயக்கன்பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், துடியலூர், மருதூர், பாப்பநாயக்கன்புதூர், இருகூர், சூலூர் என இடம், பொருள், வாழ்க்கை சூழலை மையமாக வைத்து ஊர் பெயர்கள் அமைக்கப்பட்டன. பன்னிமடை, காரமடை, கள்ளிமடை, சேத்துமடை என நீர் நிலைப்பகுதியை மையமாக கொண்டு ஊர்கள் உருவாக்கப்பட்டன….

Read More

தாவளம் உருவானது எப்படி

பெருவழிகளில் வணிகர் தங்கி செல்ல தாவளம் என அழைக்கப்படும் தங்கும் சாவடி உருவாக்கப்பட்டது. பொது இடத்தில் பொது ஜனங்கள் இந்த இலவச தங்கும் கூடம் ஏற்படுத்தப்பட்டது. சாவடிகள் 5 மைல், 10 மைல் தொலைவுகளில் அமைந்திருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் பயணம் கால்நடையாகவே அமைந்தது. பாலக்காடு கணவாய் வழியாக மூன்று பண்டைய பெருவழிகள் கிழக்கு வழியாக உருவாக்கப்பட்டன. ஆனைமடை வடபூதி நத்தம், சி.கலையமுத்தூர், பழனி, திண்டுக்கல், மதுரை, திருத்தங்கல் வழியாக அழகன்குளம் செல்லும் வகையில்…

Read More

சுடுமண் காதணிகள்…

மின்னும் ஜிமிக்கி, கலர் கலராய் கம்மல் என இன்றைய இளசுகளின் காதுகளில் பேஷன் அணிகலன்கள் அலங்கரித்து வருகிறது. ஆதி காலத்தில், அதாவது 5ம் நூற்றாண்டு காலத்திலேயே கொங்கு வட்டார பெண்களின் காதுகளை கம்மல்கள் அலங்கரித்துள்ளன. இவை சுடுமண் காதணிகள் என அழைக்கப்பட்டன. செம்மண்ணில் டிசைன் உருவாக்கி சுட வைத்து காதில் அணிவது அந்த காலத்து பேஷன். மீன், புலி, வில், வாள் என விதவிதமான வடிவங்களை சுடுமண்ணில் உருவாக்கி காதில் அணிந்து வலம் வந்தனர். கொங்கு நாட்டு…

Read More

ஆனைமலை காட்டின் கும்கி யானைகள்…!

சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கியது உம்பற்காடு (யானைக்காடு). ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இளங்கண்ணனார் ஆட்சி காலத்தில் யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்துள்ளன. நெற்பயிர் சாகுபடி செய்து அறுவடை செய்து, பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை வைத்து மிதிக்க செய்து நெல் மணி சேகரித்துள்ளனர். உம்பற்காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன. மூங்கில், தேக்கு, வாகை என பசு மர தோட்டங்களுடன் வளம் மிக்க பகுதியாக உம்பற்காடு இருந்தது. குட்டுவன் கோதை என்ற மன்னன் காலத்தில் ஆத்து பொள்ளாச்சியில் குடம்…

Read More