கிரைண்டர் கோட்டையான பாப்பநாயக்கன்பாளையம்…
குளம், குட்டை, காடு, மேடாக இருந்த ஊரு, ‘கிரைண்டர் கோட்டையாக மாறியது எப்படி தெரியுமா..?.
இந்த ஊரு வந்த கதை தெரியுமா… அந்த காலத்தில், அதாவது 1710 வருஷம் கோவையில் விடாம மழை கொட்டிட்டு இருந்துச்சாம் அப்போது அங்கே ஒரு வீடு, இங்கொரு வீடாக ஜனங்க வாழ்க்கை நடத்திட்டு வந்தாங்க.
பொதுவா மேடா இருக்கிற பகுதியில் தான் ஜனங்க வீடு கட்டு வாழறது வழக்கம். காத்து, மழையை தாங்குகிற வசதி இருக்கிறதா நம்பி ஜனங்க மேட்டு காட்டுல வீடு கட்டி வாழ்ந்தாங்க ஆனா அடை மழையில மேட்டு காட்டு வீடுக இடிஞ்சு நாசமா போச்சு. ஜனங்க எங்கே போறதுன்னு தெரியமா அல்லாடிட்டு இருந்தாங்க.
அப்போது மழை தண்ணி ஆறாக ஓடிட்டு இருந்த பள்ளத்தில சில ஜனங்க சட்டி பானையோட கிளம்பிட்டாங்க வெள்ளம் போற பள்ளத்துக்கு அந்த பக்கம் இந்த பக்க வீடு கட்டுன காத்து மழையில் தப்பிச்சுக்கலாம்னு முடிவு செஞ்சாங்க. ஊர் தலைவரா இருந்த பெரிய பாப்பா நாயுடு, அவர் தம்பி சின்ன பாப்பா நாயுடு பள்ள கரையோரம் வீடு கட்ட தயாரானாங்க.
அவங்களை பார்த்து ஜனங்க வீடு கட்டி ஊரு உருவாக்குனாங்க. அந்த ஊரு பேரு பாப்பாநாயுடு பாளையமாக இருந்துச்சு கால போக்குல அது பாப்பநாயக்கன் பாளையமா மாறிடுச்சு. இந்த ஊரு ஜனங்களுக்கு வேலை கிடைக்கலை சும்மா கிடந்த பாறை கல்லை உளியால செதுக்கி அம்மிக்கல்லு, ஆட்டாங்கல்லு செஞ்சாங்க. மாட்டு வண்டி கட்டிக்கிட்டு போய் அம்மி கல்லு, ஆட்டாங்கல்லு வித்தாங்க.
தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலு நடந்துக்கிட்டு இருக்க. ஆனா கால ஓட்டத்துல தொழில் செய்யற முறை மாறியிடுச்சு. ஆட்டாங்கல் போயி கிரைண்டர் வந்துருச்சு. உலக மார்க்கெட்டுல நம்ம பாப்பநாயக்கன்பாளையம் கிரைண்டருக்கு தனி மரியாதை உருவாச்சு. 300 வருஷத்துல இந்த ஊரு ஏகப்பட்ட மாற்றம் வந்துருச்சு. ஆனால் ஜனங்களோட மனசும், மரியாதை குணமும் எப்பவும் மாறாம இருக்கு. இது தான் இந்த ஊருக்கு சிறப்பு.
