போதைப் பொருள் கடத்திய 4 பேருக்கு 12 ஆண்டு சிறை; கோவை கோர்ட் தீர்ப்பு..!

பிரதான குற்றவாளி முனீர்.. நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசார் கடந்த 26-10-2023ம் தேதி கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் பெயர் முகவரி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனையடுத்து போலீசார் கார் மற்றும் 4 பேரையும் சோதனை செய்தனர். அதில், மலப்புரத்தை சேர்ந்த முனீர் (34) என்பவரிடம்…

Read More

விரைவில் தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு; கோவை தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் சிஇஓ அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை..!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்பாடுகளை முழு அளவில் செய்து முடித்திருக்க வேண்டும். ஊழியர்கள் பட்டியலை தயார் செய்து இறுதி செய்ய வேண்டும். பட்டியல் மிகச் சரியாக இருக்க வேண்டும். யாருக்கும் தேவையின்றி பணி சலுகை வழங்கக் கூடாது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்‌….

Read More

கோவையில் வெளிநாட்டு பணம் என நூதன ஆசை காட்டி ரூ 2.50 கோடி மோசடி; 3 பேர் கைது

காஞ்சீபுரம் கோவூர் பகுதியை சேர்ந்தவர் ரவி ( 56). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த முத்து, அவரது மகன் தீபக் (27) ஆகியோருடன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்தோம். இந்த நிலையில் முத்து கடந்த 2022-ம் ஆண்டு இறந்து விட்டார். இதனிடையே தீபக் என்னை அணுகினார். தனது அப்பாவிற்கு…

Read More

தமிழக வனத்தில் 13 ஆண்டில் 41195 தீ விபத்து..! WWF India அதிர்ச்சி தகவல்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் WWF India என்ற இயற்கைக்காக உலகளாவிய நிதியம் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் உதவி என்ற காட்டுத்தீ மேலாண்மை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறைகள், வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள்…

Read More

கோவை அரசு மருத்துவமனை முன் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு..!

திருப்பூர் வஞ்சிபாளையம் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (27 ). கிரேன் தொழிலாளி . இவர் கோவை அரசு மருத்துவமனையின் முன்பு இன்று மாலை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் . அப்போது அவர் கூறுகையில்,” எனது தம்பி கதிரேசன் (25 ) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று எங்களது வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் வாங்க அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருப்பூர் 63 வேலம்பாளையம்…

Read More

படிக்கணுமா குடிக்கணுமா..!கோவை புளியகுளத்தில் பரபரப்பு போஸ்டர்..

கோவை புலியகுளம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு மதுபான கடைகள் குறிப்பாக எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி கல்லூரிகள் உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் அதிகரிக்க என்ன காரணம் மாணவர்கள் படிக்க வேண்டுமா குடிக்க வேண்டுமாஇது புலிய குளமா சாராய குளமாஇதுதான் திராவிட மாடல் என்ற வாசகங்களுடன் நாம் தமிழர் கட்சியினர் புளியகுளம் மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில்…

Read More

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் மாயமான 2 சிறுமிகள் மீட்பு

கோவை, உக்கடம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு 2 சிறுமிகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாநகரில் ரோந்து சென்று பெண்களை கண்காணிக்கும் பிங்க் பெட்ரோல் வாகனத்தில் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் 2 சிறுமிகளையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கேரளா மாநிலம் வாளையார் அருகே உள்ள கஞ்சிக்கோடு பனங்காடு பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், விசாரணையில் அவர்கள் 17, 14 வயதுடைய அக்கா, தங்கை என்பதும்,…

Read More

மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை சாதிய விவகாரம்; கோவை கலெக்டருக்கு நோட்டீஸ்..!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை 1 பிரிவில் சசிராஜ் (42) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இதே கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் பிரகாஷ் குமார் (44) பணியாற்றினார். இவர் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்தவர். அலுவலகத்தில் சசிராஜின் ஒழுங்கீன நடவடிக்கைக்காக பிரகாஷ் குமார் அவருக்கு மெமோ கொடுத்துள்ளார். இந்நிலையில், பிரகாஷ் குமார் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கோவை உக்கடம் அரசு பஸ் போக்குவரத்து கழக அலுவலக கிளை மேலாளராக இடமாற்றம்…

Read More

கோவையில் திமுக பாஜக ஒட்டிய ‘முட்டை போஸ்டரால்’ பரபரப்பு..!

கோவை நகரில் கணபதி, ஒண்டிப்புதூர், எஸ் ஐ எஸ் எஸ் காலனி சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி முட்டை என படம் போட்டு பல இடங்களில் போஸ்டர் ஒட்டி வைத்தனர். இதை பார்த்த பாரதிய ஜனதா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவினருக்கு போட்டியாக இவர்களும் கோவையில் திமுக முட்டை, தீய சக்தி திமுகவை துடைத்தெறிவோம்…

Read More