சிறுவாணி விரிசல் அடைப்பு பணி எப்போ..?!

கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், நீர்க்கசிவை தடுப்பதற்கு மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு நடத்தினர். அணை 22.60 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. அணையில் 15 மீட்டர் ஆழத்திற்கு நீர் தேக்கி வைக்க முடியும் அணை கட்டி 90 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பக்க சுவரில் நீர் கசிவு கணிசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை தடுக்க பல்வேறு கால…

Read More

கோவையில் கட்சிக்காரங்க 2 நாள் ஓட்டு போடலாம்..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது, இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பதிவான ஓட்டுக்கள், வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி மற்றும் சுயேட்சை…

Read More

டாய்லெட் இல்லைங்க.. பாத்ரூம் போக முடியல… பெண்கள் புகார்

கோவை மாநகராட்சி மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், “ கோவை மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு அவிநாசி ரோடு மேம்பால பணி காரணமாக யூடர்ன் முறையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து பீளமேட்டுக்குள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது மேம்பால பணிகள் முடிவுற்று 6 மாதங்கள் ஆகி விட்டது. இன்னும் யூ டர்ன் முறையை மாற்றம் செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம்…

Read More

உடல் கருகி போச்சு உசுரு வாழ உதவி பண்ணுங்க…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த சாந்தி (25) என்பவர் புகார் மனுவில், ” எனக்கு திருமணமாகி விட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டிற்கு முன் என் கணவர் இறந்து விட்டார். நான் நிறுவனத்தில் வேலை செய்த போது தீ விபத்தில் என உடல் முழுவதும் கருகி போய் விட்டது. தோல் உரிந்து என்னால் வெளியே நடமாட முடியாத நிலையிருக்கிறது….

Read More

புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழக முதல்வர், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு பாராட்டு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஜாக்டோ ஜியோ உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் டி ஏ பி எஸ் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருச்சி…

Read More

11.59 லட்சம் பேருக்கு 347 கோடி பொங்கல் பணம்

கோவை மாவட்டத்தில் 11,59,274 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ளபடி பொங்கல் போனஸ் தொகை அனைத்து அரிசி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஒரு கார்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் என மாவட்ட அளவில் 347 கோடி ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்படும். வரும் எட்டாம் தேதி முதல் டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் வழக்கம்போல் பச்சரிசி சர்க்கரை கரும்பு போன்றவையும் வழங்கப்படும். பொங்கல்…

Read More

மதுக்கரையில் வாகனத்தில் சென்றவரை கடித்து குதறிய கருஞ்சிறுத்தை ..!

கோவை பாலக்காடு மெயின் தோடு ரோடு மதுக்கரை குவாரி காலனி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இன்று இரவு எட்டு மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி ஊருக்குள் இருந்து வேகமாக வந்த கருஞ்சிறுத்தை அந்த நபர் மீது பாய்ந்தது. கை மற்றும் வயிறு பகுதியில் கடித்து குதறியது. அதிர்ச்சியில் அந்த நபர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கல் எடுத்து வீசி சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை அந்தப் பகுதியில் உள்ள சிமெண்ட்…

Read More

கோவை மாவட்டத்தில் 49 கொலை, 514 விபத்து சாவு…!

கோவை மாவட்டததில் கடந்த 2025ம் ஆண்டில் மொத்தம் 49 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடியிசம பழிவாங்கல் சமுதாயம், சாதி அல்லது அரசியல் காரணங்களால் எந்தக் கொலை வழக்குகளும் பதிவாகவில்லை. பதிவான கொலை வழக்குகளில் வாக்குவாதம் தொடர்பாக 13 கொலை, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 15 கொலை, பாலியல் காரணமாக 4 கொலை, குடும்பத தகராறில் 9 கொலை திருமணம் தாண்டிய உறவு தொடர்பாக 4 கொலை, காதல் விவகாரத்தில்…

Read More

ரூ.80 கோடி ரெடி பைபாஸ் ரோடு போட நிலம் வாங்க..

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் 3ம் கட்ட பணிக்காக 80 கோடி ரூபாய் நில ஆர்ஜித பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவக்கப்படும்.மாநில நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு சார்பில் மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் ரோடு பாலம் கட்டும் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது….

Read More

ஓட்டு மெஷினை எங்க வைக்கலாம்.. அதிகாரிகள் ஆய்வு. .

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3117 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 146 ஓட்டு சாவடிகள் அமைக்க, அதாவது 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கூடுதல் ஓட்டு சாவடிகள் தயார் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. ஓட்டுமெசின்கள் சரி பார்ப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் மாவட்ட அளவில் ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை…

Read More