காண்டா மிருகம் கான மயிலை காக்க வனத்துறை அமைச்சகம் திட்டம்

கோவையில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் 91-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது: இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது அறிவியல் திட்டமிடல், விலங்குகளின் வாழ்விட இணைப்பை பாதுகாத்தல் மற்றும் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தொழில்நுட்ப ஆய்வுகள், சமூக ஆய்வுகள்…

Read More

எஸ்பி வேலுமணி குறித்து ஓவர் கமெண்ட்… போலீசில் புகார்

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது உதவியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் பரப்பி வருவதாக அதிமுக., வினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகார் அளித்த…

Read More

கோயம்புத்தூரை உருவாக்கிய கோனியம்மன்…

கோவையின் வரலாற்றில் அடையாள சின்னமாக தமிழ்நாடு பகுதியில் அமைந்திருக்கிறது கோனியம்மன் கோயில். இருளர்களின் தலைவன் கோவன் கடந்த 16ஆம் நூற்றாண்டில் ஆட்சி நடத்தி வந்தார். இவரது ஆட்சி காலத்தில் மக்கள் வாழ்வில் நன்மைகள் பெற்று பஞ்சம் பசி பட்டினி பிணிகள் ஏற்படாமல் வாழ்வதற்காக கல் ஒன்றை நட்டு வைத்து அம்மன் ஆக உருவாக்கி வழிபாடு நடத்தி வந்தார். அதன் பின்னர் கோவை செழித்து சிறப்பாக மாற ஆரம்பித்தது. வனம் காடு வன விலங்குகள் அட்டகாசம் பல்வேறு தொந்தரவுகளால்…

Read More

மருத்துவ காப்பீட்டுக்காக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், முறையீடு நேற்று நடந்தது. இதில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும். அரசு ஊழியர்களின் பெற்றோர்களையும், திருமணம் ஆகாத மகன், கணவரை இழந்த மகளையும் இத்திட்டத்தில் சேர்த்திட வேண்டும். அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை முறையினை உத்தரவாதப்படுத்த வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அட்டையினை அனைவருக்கும் உடன் வழங்க வேண்டும். உயர்…

Read More

வேளாண் பல்கலை கழகத்தில் நாளை கவுன்சிலிங்…

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு, இந்த கல்வியாண்டில் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 2,516 ஆகவும் மற்றும் இணைப்பு கல்லூரிகளில்…

Read More

கோவையில் கஞ்சா போதை தடுப்பு தீவிரம்…

கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 14ம் தேதி முதல் ஜூலை மே தேதி வரை அதிரடிப்படையினர் வடக்கு சரகத்தில் 2 கிலோ 935 கிராம் கஞ்சா, 22 கிராம் மெத்தபெட்டமையின் பறிமுதல் செய்து 3 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். அதேபோல தெற்கு சரகத்தில் 19 கிலோ 291 கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரை ஆகியவற்றை பறிமுதல் செய்து 7…

Read More

கோவை அரசு மருத்துவ மனையில் ஆதார் அவசியம்…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (எச்எம்ஐஎஸ்) என்ற மருத்துவமனை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள், உள்நோயாளிகள், தாய்சேய் நலம் மற்றும் ஆய்வக முடிவுகள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம். இத்திட்டத்தின் 2.0 செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் 3.0 திட்டம் துவங்கப்பட இருக்கிறது. இதற்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் புறநோயாளிகள் சீட்டு வழங்கும் கவுன்டரில் ஆதார் எண் கேட்டு…

Read More

உயர்கல்வி கற்காத 15 சதவீத மாணவர்கள்… கலெக்டர் விசாரணை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட அளவில் பள்ளி படிப்பு முடித்த சிலர் உயர் கல்வி கற்காமல் இருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக கல்வித்துறையினர் ஆய்வு செய்து படிக்க சொல்லி கேட்ட போது சில பெற்றோர் தங்களது குழந்தைகள் கல்வி கற்க விருப்பம் இருந்தும் படிக்க அனுப்பவில்லை என தெரியவந்தது. கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் உயர்கல்விக்கான தேர்வில் 10408 பேர் இருந்தனர். ஆனால் 8754 பேர்…

Read More

போட்டோகிராபர் கொலை : சடலம் வாங்க மறுத்து மறியல் போராட்டம்…

கோவை தடாகம் ரோடு மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (24). போட்டோகிராபர் இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் போட்டோ சூட் இருப்பதாக தனது குடும்பத்தினருடன் கூறி சில நாட்களுக்கு முன்பு சென்றார். ஆனால் அவர் திரும்ப வரவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் தடாகம் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ரயில் பாதையில் வாலிபர் சடலம் கிடந்தது. போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்தபோது காணாமல் போன பிரவீன்…

Read More

பைக் ஆம்புலன்ஸ் மீண்டும் வரவேண்டும்… தொழிலாளர்கள் வலியுறுத்தல்

தமிழக அரசின் இலவச சேவை (108) ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில்தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.EEMS செயலி, GPS மற்றும் Auto Case Assign முறைகளில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்டுள்ள பைக்…

Read More