பைக் ஆம்புலன்ஸ் மீண்டும் வரவேண்டும்… தொழிலாளர்கள் வலியுறுத்தல்

தமிழக அரசின் இலவச சேவை (108) ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில்
தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
EEMS செயலி, GPS மற்றும் Auto Case Assign முறைகளில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


நிறுத்தப்பட்டுள்ள பைக் ஆம்புலன்ஸ் (First Responder) சேவையை மீண்டும் தொடங்கி, மலைப்பகுதிகளில் அவசர மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *