மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம் மூடல்…!

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக மழை பெய்து வருகிறது .சிறுவாணி சின்ன கல்லாறு சோலை ஆறு உடுமலை திருமூர்த்தி மலை பிஏபி பில்லூர் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது.

சிறுவாணி அடிவார வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. அருவி மற்றும் ஓடையில் நீர்வரத்து உச்சத்தை எட்டியுள்ளது . ஓடையில் அருவியில் கற்கள் மற்றும் பாறையில் உருண்டு வரும் அபாய சூழல் இருக்கிறது.

எனவே பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்று அனுமதிக்கப்படவில்லை . மழை தொடர்ந்து பெய்து வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் அறிவிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *