சொத்து வாங்கிட்டு சோறு போடலையே..

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலெக்டரிடம் வழங்கப்பட்ட மனுவில்,” மணிகண்டன் என்பவர் இருகூர் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார் . இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தொழில் ரீதியாக பொறாமை கொண்டு மாவட்ட நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தார் . இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு எந்த விதிமுறை…

Read More

கோவை கலெக்டர் ஆபீஸ்க்கு 16வது முறையாக குண்டு மிரட்டல்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று 16வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஏற்கனவே 15 முறை இமெயில் மூலமாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

Read More

யானை வருது கம்பி வேலி போடுங்க…

தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் கோவை ஆறுமுக கவுண்டனூரில் இன்று நடந்தது. இதற்கு சங்கத் தலைவர் கந்தசாமி உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை சேதம் செய்கின்றன. யானையில் வருகையை தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் சோலார் மின் வேலி அமைத்துள்ளனர். இந்த நிலையில் வனத்துறை அனுமதி பெற்ற நிறுவனங்கள் மூலமாக சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என…

Read More

தண்ணீர் வாய்க்காலில் தனியாக சுற்றிய யானை..!

கோவை நரசிபுரம் ஓடை பகுதியில் இன்று யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. தண்ணீர் குடித்த பின்னர் யானை காட்டுக்குள் செல்லாமல் அந்தப் பகுதியில் ஓடை சீரமைப்பு பணியில் இருந்த ஜேசிபி முன்பு நின்று பிளிறியது. அங்கே இருந்தவர்கள் யானையைப் பார்த்து தப்பித்து ஓடினர். யானை தனியாக சுற்றிக் கொண்டிருந்த காட்சியை அந்த பகுதியில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ பதிவு பல்வேறு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜீரணத்தம் அன்னூர்…

Read More

நல்லாகுமா நல்லாம்பாளையம் ரோடு…

நம்ம கோயம்புத்தூர்ல பாதாள சாக்கடை போட்ட பின்னாடி மூடுன ரோடு எல்லாம் ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கு. ‌ குறிப்பா தார்தளம் போடாததனால பள்ளமா மாறிடுச்சு. இதை சரி செய்யுங்க. லாரி போச்சுன்னா பள்ளத்துல இறங்குது. நல்லாம்பாளையம் பகுதியில் அதிகாரிகள் கவனிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு மக்கள் பேசிக்கிறாங்க..

Read More

கோவையில் 34 லட்சம் பேருக்கு ரேஷன் அரிசி…!

கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. மாவட்ட அளவில், 11,58,798 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. நடப்பாண்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன்கார்டுகள் தடையின்றி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழங்கல் துறையினர் சார்பில் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக 34,25,505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 34,06,543 பேரின் ஆதார் பதிவுகள் பெறப்பட்டிருக்கிறது. ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகமாகி…

Read More

கோவை கலெக்டர் ஆபீஸ் 150 ஆண்டு பிரிட்டிஷ் கட்டிடம் விரைவில் இடிப்பு..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய அலுவலகம் 3 தளங்களுடன் செயல்படுகிறது. 5 ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட புதிய அலுவலகம் 3 தளங்களுடன் அருகே செயல்படுகிறது. இந்த இரு அலுவலகங்களிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, உணவு வழங்கல் பிரிவு ஆதிதிராவிடர் நலத்துறை, சர்வே, கனிம வளம், பிற்பட்டோர் நலத்துறை, வேளாண்மை. சமூக நலத்துறை, இ சேவை மையம், ஆதார் மையம், நிலம் எடுப்பு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், சத்துணவு பிரிவு…

Read More

SIR படிவம் தர நாளை கடைசி..

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடக்கிறது. மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 15.57 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது, இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர் திரும்ப இடம் பெற வேண்டுமானால், அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இவர்கள் திரும்ப வாக்காளர்களாக சேர்க்க முடியும். எஸ்ஐஆர்…

Read More

மக்களை காக்கும் மாகாளி ஆத்தா..

உக்கடம் என் ஹெச் ரோடு பகுதியில் கண் திறந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் காட்சி தந்த மாகாளியம்மன். அம்மன் கண் திறந்த நிலையில் அங்கே பக்தர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

Read More

ஆத்தா ”கண்” பார்த்தா..

உக்கடம் என் ஹெச் ரோடு பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் அம்மன் சாமிக்கு இன்று பூஜை நடந்தது. அப்போது அம்மன் கண் திறக்கப்பட்டதாக அங்கே இருந்த பக்தர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோயிலில் கூட்டம் குவிந்தது. அம்மன் சிலையில் கண் திறந்தது எப்படி என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் விசாரித்தனர். ஆத்தா கண் திறந்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.

Read More