கோவை மத்திய சிறையில் கஞ்சா: போலீசார் அதிரடி ரெய்டு…!

கோவை மத்திய சிறையில் கோவை மாநகர போலீசார் இன்று காலை முதல் திடீர் சோதனை ஈடுபட்டனர். சிறையில் உள்ள கைதிகள் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் பாலியல் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக் , விசாரணை கைதிகள் உள்ள வளாகங்களில் போலீசார் சோதனை செய்தனர் . சிறையில் உள்ள கழிவறைகள், உணவு தயாரிப்பு கூடம் மற்றும் மைதானங்களில் மண்ணைத்…

Read More

மீடியா டவருக்கு மவுசு… போலீசாருக்கு ரவுண்ட்ஸ்

கோவை மாநகராட்சி சார்பில் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்தது. உக்கடம் பெரியகுளத்தின் கரை சீரமைக்கப்பட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் வாக்கிங் தளம், விளையாட்டு பூங்கா, சைக்கிளிங் பாதை போன்றவை உருவாக்கப்பட்டது. ஐ லவ் கோவை என பிரமாண்ட ஐகான் ஏற்படுத்தப்பட்டது. உக்கடம் வாலாங்குளம் வாக்கிங் தளம், படகு துறை, குளங்களின் நடுவே உருவாக்கப்பட்ட தீவு திடல், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட டான்சிங் நீர் ஊற்று, வாக்கிங் தளம்…

Read More

ITI admission… கோவை மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை

கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள், டிரோன் பைலட், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ம் ஆண்டிற்கான ஆன்லைன் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. 8, 10, 11, 12 ம் வகுப்பு மற்றும் டிகிரி, டிப்ளமோ படித்த 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் இப்பயிற்சியில்…

Read More

நிதி நிலைமை சீரான பின் 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை:அமைச்சர் அருண்ராஜ் தகவல்…!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவிகள் தற்கொலை செய்தது பெரும் வலியை அளிப்பதாக கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் வீரமணி தலைமையுரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் பவன்குமார் முன்னிலை வகித்தார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று 100 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத், சட்டமன்ற…

Read More

சிறுவாணி அணையில் விரிசல்: நீர் கசிவு தடுக்க ரூ.64 கோடி செலவிட திட்டம்…

கோவை சிறுவாணி அணை சீரமைக்க 64 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கேரள அரசு தமிழக குடி நீர் வடிகால் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் சிறுவாணி அணையின் மேம்பாட்டு திட்டம் தொடர்பான இரு மாநில அதிகாரிகளின் கூட்டு குழு கூட்டம் நடந்தது. இதில் கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள், தமிழக குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சி மற்றும் பாலக்காடு மாவட்ட நிர்வாகத்தினர் பங்கேற்றனர். இதில் சிறுவாணி அணையின் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து…

Read More

Road damage: தரம் கெட்ட தார் ரோடு… வாகனங்கள் படாதபாடு…

கோவை மாவட்டத்தில் 483.5 கி.மீ தூர மாநில நெஞ்சாலை, 531 கி.மீ தூர மாவட முக்கிய ரோடு (MDR), 1492,8 கி.மீ தூர இதர கிராம ரோடு (ODR) என 25074 கி.மீ தூரத்திற்கு ரோடு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு வழிப்பாதையாக 604,5 கி.மீ தூர ரோடு, இடை வழிப்பாதையாக 329.8 கி.மீ தூர ரோடு, இரு வழிதட பாதையாக 640 கி.மீ தூர ரோடு, பாவு தள இரு வழிப்பாதையாக 262.2 கி.மீ தார் ரோடு,…

Read More

convict treatment: கோவை ஜி. எச்சில் கைதிகள் வார்டு ரொம்ப மோசம்…

கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தனி பிரிவு (கான்விக்ட் வார்டு) அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த வார்டு பழுதாகி கிடக்கிறது. பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட ஒய்வறை கழிவறையை விட மோசமான நிலையில் இருக்கிறது. இந்த அறையை போலீசார் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகிறார்கள். கைதிகள் வார்டு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. கைதிகள் அடிக்கடி தப்பி செல்வதால், சிறையில் உள்ளது போல்…

Read More

New born child death : ரோட்டில் வீசப்பட்டு இறந்து கிடந்த 5 மாத ஆண் குழந்தை…

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருபவர் கலைவாணி (30). இவர் இன்று பணியில் இருந்தபோது, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் போன் செய்துள்ளார். அவர் பழையூர் நியூ சித்ராம்பலம் லே-அவுட், பகுதியில் சாலையோரத்தில் ஒரு குழந்தை சடலமாக கிடப்பதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சுமார் 5 மாத ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தார். அவரது…

Read More

Illegal affair:தொழிலாளி அடித்து கொலை செய்து சடலத்தை ரோட்டில் வீசிய கொடூரம்…

கோவை வேலாண்டிபாளையம் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் மணி (40). இவர் கூலிக்கு ஆள் பிடித்து விடும் புரோக்கர் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் கூலி முக்கு அருகே வேலைக்கு காத்திருக்கும் தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்காக அனுப்பி வந்தார். மணிக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். மணி கட்டிட வேலைக்கு பெயர் விவரம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரை வேலைக்கு அனுப்பினார். அந்த நபர் அடுத்த நாள் வேலை கேட்டு மணியின் வீட்டுக்கு…

Read More

guideline value: தமிழகத்தில் விரைவில் புதிய வழிகாட்டி மதிப்பு அமலாக்க உத்தரவு…

தமிழகத்தில் கடந்த 2023 ம் ஆண்டு பத்திர பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு (guideline value) உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக மாநில அளவில் 578 சார் பதிவாளர் அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஓரிரு மாதங்களில் புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடு…

Read More