கோவை சென்ட்ரல் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை செய்தனர். அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இடைத்தரகர்கள் வாகனங்கள் போன்றவற்றில் போலீசார் சோதனை செய்தனர் இதில் கணக்கில் வராத சுமார் 64 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப் பெருமளவில் லஞ்சப் பணம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்…

Read More

நீட் தேர்வினால் மாணவி தற்கொலை கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி அனு கீர்த்தனா. நீட் மறு தேர்வு காரணமாக இன்று மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் தெற்கு ஆர்டீ ஓ மாருதி பிரியா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இறந்த மாணவியின் குடும்பத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவிகளுக்கு…

Read More

Tamil Nilam app: நத்தம் ரயத்துவாரி நிலம் எங்கே…

தமிழக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை மூலமாக www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கியுள்ளது. அதில், பட்டா மாறுதலுக்கான – தமிழ் நிலம் செல்போன் செயலி இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் செய்வதற்கான விண்ணப்பிக்க ஏதுவான https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் (ஊரகம்), மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டது….

Read More

7th finance commission: கோவை ஊராட்சிகளில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 7th finance committee (7வது நிதிக்குழு கமிஷன்) அதிகாரிகள் நாளை கோவை மாவட்டத்தில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் திட்ட பணிகள் நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. நிதி இல்லாமல் பெரும்பாலான பணிகள் முடங்கி போய் கிடப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் எவ்வளவு நிதி இருக்கிறது. எவ்வளவு வருவாய் பெறப்பட்டது, கடந்த காலங்களின் வரவு செலவு அறிக்கை விவரங்களையும் திட்ட பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். ஊராட்சிகளில்…

Read More

கோவையில் ஜமாபந்தி; 2 நாளில் 5517 மனுக்கள் குவிந்தது…

கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம் தேதி துவங்கியது. மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி வரை ஜமாபந்தி நடத்தப்படவுள்ளது. மதுக்கரையில் 18 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை வடக்கு தாலுகாவில் வரும் 25ம் தேதி வரையிலும் முகாம் நடக்கவுள்ளது.. வார விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில்…

Read More

கோவையில் செம்மண் முறைகேடு; ரூ50 கோடி வசூல் தாமதம்…

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, வெள்ளிமலை பட்டினம், போளுவாம்பட்டி, தென்கரை, சென்னனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதி இன்றி செம்மண் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக வருவாய்துறை மற்றும் கனிமவளத்துறையினர் சோதனை நடத்தினர். ட்ரோன் சர்வே செய்யப்பட்டது. இதில் 280 குழிகளில் 3.5 மீட்டர் ஆழம் வரை செம்மண் முறைகேடாக தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. சட்ட விரோத செங்கல் சூளைகளுக்காக இந்த செம்மண் லோடு கடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன்…

Read More

கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…

கோவை மாவட்டத்தில் பவுண்டரி, ஆட்டோ மொபைல்ஸ், கிரைண்டர் உள்பட பல்வேறு வகையான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட அளவில் தொழில் நிறுவனங்களுக்கான திறன்மிகு தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தேவை அதிகரித்து வருகிறது. சிஎன்சி ஆபரேட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணி செய்பவர்கள், வெல்டர், பிட்டர்,…

Read More

தமிழக முதல்வர் விஜய்க்கு செவிட்டு மெசின் பார்சல்….

கோவை, ஜூன் 18: கோவை கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி (50). இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தபால் அலுவலகத்தில் காது கேட்கும் கருவியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பார்சலில் அனுப்பினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் தினமும் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் சத்தமாக குரல் கொடுத்து வந்தார். இப்போது அவரது ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட…

Read More

நீட் பயத்தில் மாணவி தற்கொலை…

கோவை குனியமுத்தூர் பாரூக் நகரை சேர்ந்தவர் செந்தில் பிரபு (47). கோவை சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளராகவும், மா.கம்யூனிஸ்ட் மேற்கு நகர் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மகள் அனுகீர்த்தனா (19). எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். அனுகீர்த்தனா 2 முறை நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த முறை எழுதிய நீட் தேர்வும், வினாத்தாள் கசிவு காரணமாக…

Read More

ஸ்டாலின் போட்டோ மாட்டக்கூடாதுங்க… கோவை மாநகராட்சியில் மல்லுக்கட்டு…

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மூன்று மாதங்கள் கடந்து இன்று காலை டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு மேயர் ரங்கநாயகி முன்னாள் முதல்வர் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் அழகு…

Read More