SIR தேதி மேலும் நீட்டிப்பு..
தமிழகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கிறது. இதில் பல மாவட்டங்களில் பணிகள் முடியவில்லை. ஏற்கனவே கடந்த நாலாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் இன்றுவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இருப்பினும் பணிகள் முடியவில்லை. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.
