கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை மாவட்டத்தில் பீளமேடு பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த அலுவலகங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் வழக்கம் போல் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மர்ம நபர் ஒருவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி இமெயில் மூலமாக…

Read More

கோவையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு துவக்கம்

கோவை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. 130 மையங்களில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று தமிழ் மற்றும் மொழி தேர்வு எழுதினர். கோவை நகரில் பல்வேறு பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருக்கிறதா விதிமுறை மீறல் நடந்துள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Read More

கோவையில் சூப்பர் பாஸ்ட் விபத்து; கார் பைக் காலி..!

கோவை அவிநாசி ரோடு பீளமேடு வரதராஜா மில் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சென்ற இந்த கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. நிலை தடுமாறி அருகில் சென்ற பைக் மீது மோதியது. இதில் கார் மற்றும் பைக் நொறுங்கி போனது. பெட்ரோல் கசிவு ஏற்பட்ட நிலையில் கார் மற்றும் பைக் தீ பிடித்தது. இதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சி…

Read More

கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலையா..? இந்து முன்னணி கடும் எதிர்ப்பு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில்மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ்,இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டு இன்று புகார் மனு அளித்தனர்.இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது மகாத்மா காந்தியின் நினைவாக காந்திபுரம் என காட்டூர் பகுதி அழைக்கப்பட்டது .காந்திபுரத்தில் நஞ்சப்பா ரோட்டில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு செல்லும் வழியில் லட்சுமி மில்ஸ் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு மார்பளவு ராஜாஜி சிலையை நிறுவியது. அவரது நினைவு நாள் அன்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாலை…

Read More

கோவையில் வாலிபர் கையை கட்டி குளத்தில் வீசி கொலை..!

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் இன்று சடலம் ஒன்று மிதந்தது. அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர் . இறந்த நபருக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம். அவரின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் அந்த நபரை தாக்கி கைகளை கட்டி தண்ணீரில் தூக்கி வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது. உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இருந்து அந்த…

Read More

கோவையில் போலி போன் பே மூலமாக மோசடி: மாணவர் கைது

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள ஒரு செல்ல பிராணிகள் விற்பனை கடையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கௌதம் (20) தனது நண்பர் ஒருவருடன் சென்றார். கடையில் அவர்கள் 5300 ரூபாய் மதிப்பில் பூனைக்குட்டி ஒன்று வாங்கினார்கள். அதற்கு போன் பே மூலமாக பணம் செலுத்தியதாக கடை உரிமையாளர்களிடம் ஆதாரம் காட்டினர். அப்போது கடை உரிமையாளர் தனது அக்கவுண்டில் பணம் வந்து சேரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு…

Read More

கோவை மாவட்டத்தில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்கம்..

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் நாளை துவங்குகிறது.வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது. கோவை 5 மாவட்டத்தில் 130 மையங்களில் தேர்வு நடக்கிறது. ஒரு அறைக்கு 20 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 37 வழித்தடங்களும்…

Read More

தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய்..!

கோவையில் வலம் வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்… தமிழகத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம், பரவல் கட்டுப்படுத்தப்பட ப்படவில்லை. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ளவர்களின் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு வருவதாக எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் புகார் கூறி வருகின்றனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் எச்.ஐ.வி தொற்று சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரின…

Read More

கோவையில் மாணவர் அறைகளில் ரெய்டு: கஞ்சா, மெத்தபெட்டமைன் சிக்கியது

செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதை பொருட்கள் டிஸ்ப்ளே.. கோவை மாவட்டத்தில் மதுக்கரை செட்டிபாளையம், எட்டிமடை மலுமிச்சம்பட்டி ,ஒத்தக்கால் மண்டபம், சூலூர் , நீலாம்பூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. CASO(cardon and search operation) என்ற பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் 4.5 கிலோ கஞ்சா 10 கிராம் மெத்தபெட்டமின் , 2.5 கிலோ கஞ்சா…

Read More

‘வீட்டு சாப்பாடு போர்’..கோவையில் அதிகரிக்கும் ஓட்டல்கள்..!

கோட்டைமேடு புட் ஸ்டிரீட். ‌.. கோவை மாவட்டத்தில் பம்பு, கிரைண்டர், மோட்டார். ஆட்டோமொபைல், ஜவுளி உட்பட பல்வேறு வகையான தொழில்கள் அதிகமாக இருக்கிறது. சமீப காலமாக ஹோட்டல் தொழில்கள் மாவட்ட அளவில் பரவலாக அதிகமாகி வருகிறது. குறிப்பாக இரவில் செயல்படும் ஹோட்டல்கள் அதிகமாகிவிட்டது இதற்காக பிரதான ரோடுகள் முக்கிய பகுதிகளில் ஹோட்டல் தொழிலுக்கு ஏற்ற கட்டுமானங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது ஓட்டல் தொழில் பல மடங்கு அதிகமாகி விட்டதாக இந்த…

Read More