பெரியார் நூலகத்திற்கு 45 ஆயிரம் புத்தகங்கள் வரவில்லை…

தமிழக முதல்வர் விஜய் நாளை (16ம் தேதி) பெரியார் நூலகத்தை திறந்து வைத்து மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி, தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்தது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த 7 மாடி வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள கலையரங்கம், அறிவியல் மையம் கோளரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டது. முதல் தளத்தில் அறிவியல் மையம் 2வது தளத்தில் சிறுவர் நூலகம், சுய வாசிப்புப் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் 4வது தளத்தில் தமிழ் புத்தகங்களும் பருவ இதழ்களும் கொண்ட பகுதி 5 மற்றும் 6 வது தளத்தில் ஆங்கில புத்தகப் பிரிவு, புத்தாக்க மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது.

7வது தளத்தில் அறிவியல் மையம், எண்ணிம நூலகம் மற்றும் ஏஐ செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்ப காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டு வந்தது.

நூலகத்தில் 50 கோடி ரூபாய்க்கு 1.25 லட்சம் புதிய புத்தகங்கள் வாங்கி பயன்பாட்டில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், நேற்று வரை சுமார் 80 ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே இருந்தது. பருவ இதழ்கள் பகுதி மொத்தமாக காலியாக கிடக்கிறது. அறிவியல் மையம், தொழில் முனைவோர் மையம் காலியாக பணி முடிக்ககமல் கிடக்கிறது. போட்டி தேர்வு, தமிழ், ஆங்கில நூல்கள் பகுதியில் கணிசமான புத்தகங்கள் இல்லை. பல ரேக்குகள் சும்மா காட்சி பொருளாக இருக்கிறது.

அவசர கதியில் பல்வேறு பகுதியில் தனியார் நிறுவனங்களின் மூலமாக புத்தகங்கள் வாங்கி அடுக்கி வைக்கும் பணிகள் நடந்தது. போலீசார் மோப்ப நாய் மூலமாக கண்காணிப்பு பணி நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

3 thoughts on “பெரியார் நூலகத்திற்கு 45 ஆயிரம் புத்தகங்கள் வரவில்லை…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *