Covai highway: ரோடு பாலம் பணிகள் ரொம்ப லேட்…
கோவை மாவட்டத்தில் ரோடு, பாலம் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. கேட்க ஆளில்லாத நிலையில், ஹைவேஸ் துறையில் முறைகேடு அதிகமாகி விட்டது.
கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் குரும்பபாளையம் ரோடு அகலமாக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி துவக்கப்பட்டது. இந்த பணி வரும் ஜூலை 72ம் தேதி முடிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 60 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.
இன்னும் 40 சதவீத பணிகள் முடிய மேலும் 6 மாதமாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கனூர் பள்ளம் பாலம் அமைக்கும் பணி கடந்த 15.96 கோடி ரூபாய் செலவில் கடந்த மே மாதம் 27ம் தேதி துவக்கப்பட்டது. பணி பூஜைக்கு பின்னர் நடக்கவில்லை. கணபதி மோர் மார்க்கெட் அகலமாக்கும் பணி 51.02 கோடி ரூபாய் செலவில் கடந்த 29-08-2025ம் தேதி துவங்கியது.
இந்த பணிகள் இதுவரை 6 சதவீதம் முடிவு பெற்றது. வரும் நவம்பர் 26ம் தேதிக்குள் இந்த சாலை விரிவாக்க பணிகளை செய்து முடிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் மேலும் ஒரு ஆண்டு ஆகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் அணுகு சாலை அமைக்கும் பணி 8.05 கோடி ரூபாய் செலவில் 5-17-2025ம் தேதி துவங்கியது. இந்த பணியை கடந்த 6ம் தேதி முடித்திருக்க வேண்டும். இதுவரை கஷ்டப்பட்டு 20 சதவீதம் முடித்திருக்கிறார்கள்.
காந்தையாற்றின் குறுக்கே 18.37 கோடி ரூபாய் செலவில் 10-02-2023ம் தேதி பாலம் கட்டும் பணி துவங்கியது. கடந்த ஆண்டு 09-02-2025ம் தேதி பணியை முடித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 72 சதவீதம் மட்டுமே பணி முடிந்தது. நீலிக்கோணம்பாளையம் எஸ்ஐஎச்எஸ் காலனி மேம்பாலம் பணி 73.09 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டது.
இதில் 6114 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதுவரை 5927 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 186 சதுர மீட்டர் நிலம் தாமதமாகி வருகிறது. இன்னொரு பகுதியில் 7009 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. கரவழி மாதப்பூர் மேம்பாலம், சேடபாளையம் ரயில்வே பாலம் பணி 75 சதவீதம் மட்டுமே முடிந்தது.
வடகோவை மருதமலை ரோடு அகலமாக்கும் பணி 10 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டு நீண்ட காலம் தாமதமாகி வருகிறது. மாவட்ட அளவில் மாறில, தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதமாக நடக்க
அலட்சியமான செயல்பாடு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த காலத்திற்குள் முடிக்காத நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்க கூடாது என மக்கள் கடும் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
பணிகள் தாமதமாகி வருவதால் மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் தவித்து வருகின்றனர். கோவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார். ஆனால் அவர் பணி தாமதமாகி வரும் பகுதியை பார்வையிட செல்லவில்லை.
அவினாசி ரோடு, மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டை பார்வையிட்டார். திட்ட பணிகள் தாமத விவகாரம் குறித்து எந்த கேள்வியும் கேட்காமல் அடுத்த திட்டம் என்ன என அதிகாரிகளிடம் விசாரித்து அவசர கதியில் சென்று விட்டார். அமைச்சர் ஆய்விற்கு பின்னரும் எந்த பணி முன்னேற்றமும் இல்லாததால் மக்கள் மத்தியில் விரக்தி நிலவுகிறது.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், “குறிப்பிட்ட சில திட்ட பணிகள் தாமதம் காரணமாக அந்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சாயிபாபா காலனி மேம்பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.
அந்த பாலம் பணிகள் உரிய காலம் அவகாசத்திற்குள் முடிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இதர பகுதிகளில் பணிகளை வேகப்படுத்தி இருக்கிறோம். தேர்தல் காரணமாக 2 மாதம் பணி பாதிக்கப்பட்டிருந்தது, ” என்றனர்.
