கோவையில் மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது புகார்
கோவை புலியகுளம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்களை நேற்று கணித ஆசிரியர் ஒருவர் பிரம்பால் தாக்கியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் தரப்பட்டது. ஆனால் தங்களது எல்லைக்குள் இல்லை என போலீசார் புகார் வாங்கவில்லை. பீளமேடு போலீசில் மாணவரின் பெற்றோர் புகார் தந்தனர். இந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் புகார் வழக்கு வேண்டாம். அந்த ஆசிரியரை நாங்கள் பணி நீக்கம் செய்து…
