கோவையில் மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது புகார்
கோவை புலியகுளம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்களை நேற்று கணித ஆசிரியர் ஒருவர் பிரம்பால் தாக்கியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் தரப்பட்டது. ஆனால் தங்களது எல்லைக்குள் இல்லை என போலீசார் புகார் வாங்கவில்லை. பீளமேடு போலீசில் மாணவரின் பெற்றோர் புகார் தந்தனர்.
இந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் புகார் வழக்கு வேண்டாம். அந்த ஆசிரியரை நாங்கள் பணி நீக்கம் செய்து விடுகிறோம் ஒரு மாதம் அவகாசம் தர வேண்டும். வேறு ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. ஆசிரியர் நியமனம் முடிந்ததும் அவரை நீக்கம் செய்கிறோம் என மாணவரின் பெற்றோரிடம் கேட்டு கொண்டனர். இதை தொடர்ந்து புகார் வாபஸ் பெறப்பட்டது.
மாணவர்கள் 2 பேரை கணித ஆசிரியர் தாக்கியதில் அவர்களின் கை, முகுது பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. விளையாட்டு நேரம் முடிந்து வந்த மாணவர்கள் கடைசி பெஞ்சில் அமர்ந்துள்ளனர். அப்போது வகுப்பிற்கு வந்த ஆசிரியர் ஏன் இடம் மாறி கடைசி பெஞ்ச் போனீர்கள் என கேட்டு தாக்கியதாக தெரிகிறது.
இந்த ஆசிரியர் ஏற்கனவே பல மாணவர்களை பிரம்பால் வெளுத்து விட்டதாகவும் புகார் இருக்கிறது. இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது போலீஸ் புகார் சென்ற பின்னர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பள்ளி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Such an entertaining experience! The graphics are crisp and the rewards keep me coming back every day. If you want fun, go for y999game
Very professional setup and the loading times are minimal. It is clear they care about the user experience. Big thumbs up for br585bet42